சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் 3வது மனித நேயம் பேணும் இரத்ததான முகாம்

  • பழுலுல்லாஹ் பர்ஹான்

harisகாத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்துவரும் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் 3வது மனித நேயம் பேணும் இரத்ததான முகாம் காத்தான்குடி டெலிகோம் வீதியிலுள்ள அதன் காரியாலத்தில் நேற்று முன்தினம் 12 சனிக்கிழமை இடம்பெற்றது.

சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் எம்.ஐ.எம்.ஹாரிஸ் ஜேபி தலைமையில் இடம்பெற்ற மேற்படி மனித நேயம் பேணும் இரத்ததான முகாமில் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உட்பட ஊர் பிரமுகர்கள் ,புத்திஜீவிகள் ,இளைஞர்கள்,பொலிஸ் அதிகாரிகள், சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் ,ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

haris

இதன் போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் விவேக்கினால் பரிசோதிக்கப்பட்ட ஆண்கள்; தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர்.

இங்கு சுமார் 73 பேர் தங்களது இரத்தத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவுக்கு தானமாக வழங்கியுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் விவேக் தெரிவித்தார்.

குறித்த சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம் காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப்பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment