சுட்டதும் அவனே,
சுடு பட்டதும் அவனே,
சுடுவதற்குதவிய கருவியும் அவனே,
சூடேற்றிய நெருப்பும் அவனே,
சூட்டினால் ஏற்பட்ட காயமும் அவனே,
காயத்தால் வந்த வேதனையும் அவனே,
மனைவியின் மஞ்சத்தில் பெற்ற மகளை மறந்த மறக்கனும் அவனே,
காத்தான்குடி தள வைத்தியசாலையும் அவனே,
அங்கு பணிபுரியும் வைத்தியரும் அவனே,
மருந்தும் அவனே,
மருந்திட்ட தாதியும் அவனே,
விசாரித்த அதிகாரியும் அவனே,
கைது செய்த காவல்துறையும் அவனே,
வேதனையுடன் வெகுண்டெழுந்த மக்களும் அவனே,
நீதிகேட்டு வாதாடிய குழந்தையின் உறவினரும் அவனே,
எனவே, எல்லாம் அவனே.
உள்ளது ஒன்றே மற்றது அன்றே,
ஒன்றும் பூஜ்ஜியமும் இரண்டாகாதே,
இதையறிந்தவன் வாழ்வு மண்ணாகிப்போனதே,
என்னிடம் நீதியை எதிர்பாராதே,
அதற்கும் எனக்கும் சம்பந்தமே கிடையாதே,
புவிக்கு நான் செய்த அநீதி இப்புவியிலேயே என்னை வாட்டுதே,
பாறூக் மௌலவிக்கு நான் இழைத்த கொடூரம் இப்பாரினில் என்னை தூற்றுதே,
கட்டுக்கதை கூறி மக்களை வழிகெடுத்தேனே- ஜீவ
காருண்யத்தை கற்றுக்கொடுக்க மறந்தேனே,
அரியாக அப்போது வாழ்ந்தேனே,
இச்சமயம் குள்ளநரியாக நான் மாறிப்போனேனே,
முதிரை மரமென்று என்னை நினைத்தேனே,
பட்ட முருங்கைதானென உணர்ந்தேனே
மறுமையில் என்னிலை அறியேனே,
மக்களின் பாவத்தை நானள்ளிச்சுமப்பேனே.
- முஹம்மது நியாஸ்
Leave a comment