புதிய காத்தான்குடி முஹைதீன் ஜும்மா பள்ளிவாயல் வீதியை சிப்லி பார்வையிட்டார்

  • M.T. ஹைதர் அலி

New kattankudy roadகாத்தான்குடி: புதிய காத்தான்குடி முஹைதீன் ஜும்மா பள்ளிவாயல் வீதி பலவருட காலமாக சீர் செய்யப்படாமல் இருந்தமையினால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வந்தனர், எனவே காத்தான்குடி நகரசபையினால் இவ்வீதியினை சம்பூர்ணமாக செப்பனிடுவதற்காக பத்துலட்சம் ரூபாய் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு அதன் வேலைகள் முடிவடைந்துள்ளது.

இவ்வீதியின் தரத்தினையும், ஒழுங்கமைப்பையும் பரிசோதிற்பதற்காகவும், பார்வை இடுவதற்காகவும் திடீர் விஜயம் ஒன்றினை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ பொறியியலாளர் ஷிப்லி பாறூக் இன்று (15.02.2016) மேற்கொண்டார். அதன்போது அவ்வீதியின் சில பகுதிகளில் நீர்வடிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதனையும், மழை மக்களின் வீடுகளுக்குள்ளும் சென்று இருப்பதனையும் கண்ணுற்ற அவர், அதனை அழகிய முறையில் நீர் வடிதோட கூடிய வகையில் மேற்பரப்பு வாடிகான் அமைத்து சீர்செய்யும் படியும், தாழ்வாக இருந்த பகுதியினை மீண்டும் தார் இட்டு செப்பனிடும் படியும் காத்தான்குடி நகரசபையின் தொழிநுட்ப உத்தியோகஸ்தரிடமும். அதற்குரிய அதிகாரிகளிடமும் ஆலோசனை வழங்கியதுடன் அதனை சீர்செய்து கொடுக்கும்படி பணிப்புரை விடுத்தார்.

New kattankudy road

Shibly Niyazee Haleem

Published by

Leave a comment