காத்தான்குடி: காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலத்தின் 2016ம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 8 வருடங்களின் பின்னர் அண்மையில் காத்தான்குடி -05 ஆற்றங்கரையிலுள்ள காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலத்தின் அதிபர் ஏ.ஜீ.எம்.ஹகீம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் கலந்து கொண்டார்.
மூன்று இல்லங்களாக பிரிக்கப்பட்டு இடம்பெற்ற இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் சிவப்பு நிறத்தில் போட்டியிட்ட றூபி இல்லம் 285 புள்ளிகளை பெற்று முதலாவது இடத்தையும், பச்சை நிறத்தில் போட்டியிட்ட எமெரல்ட் இல்லம் 254 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தையும்,நீல நிறத்தில் போட்டியிட்ட சபெயர்
இல்லம் 218 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தையும்
பெற்றிருந்தன.

இதன் போது அதிதிகளினால் இல்ல விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய இல்லங்களுக்கும் ,மாணவர்களுக்கும் கிண்ணங்களும்,சான்றிதழும்,பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் ஓட்டம் ,அணி நடை ,உடற்பயிற்சி போன்ற பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் கௌரவ மற்றும் சிறப்பு அதிதிகளாக பரீட் பவுண்டேஷன் தலைவரும்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கே.எல்.எம்.பரீட்,மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி முஹம்மட் றுஸ்வின்,மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கணிதப் பாட ஆசிரிய ஆலோசகர் என்.எம்.எம்.பரீட்,அதன் ஆங்கிலப் பாட ஆசிரிய ஆலோசகர் ஐ.எம்.மர்சூக்,அதன் விஞ்ஞானப் பாட ஆசிரிய ஆலோசகர் ஏ.எம்.றபீக்,அதன் ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலாசகர்களான ஐ.எம்.இப்றாஹீம், எம்.ஆர்.எம்.நவாஸ்,அதன் உளவியல் ஆசிரிய ஆலாசகர் எம்.ஆர்.ஜவாத் உட்பட ஆசிரிய ஆலோசகர்கள்,பாடசாலைகளின் அதிபர்கள், அல்-ஹிறா மஹா வித்தியாலத்தின் பிரதி அதிபர் பீ.எம்.எம்.அமீன்,ஆசிரிய ஆசிரியர்கள்,மாணவர்கள், அல்-ஹிறா மஹா வித்தியால பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் ஏ.ஆர்.எம்.றசீட் உட்பட அதன் உறுப்பினர்கள் ,குபா இளைஞர் கழகத்தின் தலைவர் சுஜாத் உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ,ஊர் பிரமுகர்கள், பொது மக்கள் என கலந்து கொண்டனர்.
காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலத்தின் குறித்த இல்ல விளையாட்டு காத்தான்குடி கோட்டக் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் 2016ம் ஆண்டில் முதற்தடவையாக இடம்பெறும் இல்ல விளையாட்டுப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.



Leave a comment