“நாட்டைப் பாதுகாக்க உயிரையும் அர்ப்பணிக்கத் தயார்”- ஜனாதிபதி

maithiriகொழும்பு: நாட்டைமுன்னோக்கி கொண்டு செல்லவே மக்கள் என்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்துள்ளனர். எதிர்வாதிகள் கூறுவதுபோல் நாட்டை அழிக்க மக்கள் என்னை தெரிவு செய்யவில்லை. எந்தவெளி நாட்டு அழுத்தங்களுக்கும் அடிப்பணியாது நாட்டினதும் நாட்டுமக்களினதும் கௌரவத்தை பாதுகாப்பதற்கு உயிரையும் அர்ப்பணிப் பணிக்கத் தயாராக உள்ளதாகவும், மக்களது ஆணையைத் தான் எப்போதுமே மதித்து நடப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தேசிய பொருளாதாரம் மற்றும் தேசிய கலாசாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த உடன்படிக்கைகளும் எந்த நாட்டுடனும் செய்து கொள்ளப்படமாட்டாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் செய்து கொள்ள இருக்கும் உத்தேச உடன்படிக்கை தொடர்பாக அரசியல் எதிர்வாதிகள் பல்வேறு பொய்யான கருத்துக்களை வெளியிட்டுவருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Published by

Leave a comment