சபாநாயகருக்கு கொலை அச்சுறுத்தல்

karu-jayasuriya_2[1]கொழும்பு: சபாநயகரான கரு ஜயசூர்ய, தனக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கபட்டுள்ளதாக  நேற்று தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் தாம் சுயாதீனமாக இயங்க அனுமதிக்கும்படி கோரியதால் ஏற்பட்ட சர்ச்சையின் பின்னணியில் அவர் இத்தகவலை நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, தினேஷ் குணவர்தன மற்றும் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பலர் தாம் நாடாளுமன்றத்தில் தனித்து இயங்க வேண்டும் எனக் கோரி நேற்று சபைக்கு நடுவே வந்து கோஷமெழுப்பினர்.
இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று வரை சபாநாயகர் கரு ஜயசூர்யவினால் ஒத்தி வைக்கப்பட்டது.

புதன்கிழமை நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் வழக்கம்போல் துவங்கிய நிலையில், மஹிந்த ஆதரவு அணியினர் மீண்டும் தமது கோரிக்கையை முன்வைத்தனர். இதனால் அங்கு ஆளுங்கட்சி மற்றும் மஹிந்த ஆதரவு உறுப்பினர்களுக்கிடையில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றன.

இதன்போது குறிக்கிட்டு பேசிய சபாநாயகர் கரு ஜயசூர்ய, இந்த விஷயம் தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அசம்பாவிதங்களின் பின்னர், தன்னை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட நபர் ஒரு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்றுக் கூறினார்.

தொலைபேசி அழைப்பை மேற்கொண்டவர் யார் என்று தனக்கு தெரியாது என்று கூறிய அவர், கொலை அச்சுறுத்தலுக்கு அடிபணிய வைக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

Published by

Leave a comment