- NFGG ஊடகப் பிரிவு
மஞ்சந்தொடுவாய்: மஞ்சந்தொடுவாய் ஹிழ்றியா பாலர் பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைகள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் வழங்கி வைக்கப்பட்டன. கடந்த 07.02.2016 அன்று மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களினால் இந்த சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டன. பாடசாலையில் கல்விபயிலும் 35 மாணவர்கள் இந்த சீருடைகளைப் பெற்றுக் கொண்டனர்.
ஹிழ்றியா பாலர் பாடசாலையின் தலைவர் MIM. ஹகீம் அவர்களின் தலைமையல் நடை பெற்ற இந்நிகழ்வில் I. அப்துல் றஊப், MM. லெத்தீப், MHM. றஸ்ஸாக், IM. அஸனார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் ‘தான் பிறந்து வளர்ந்த இப்பிரதேச மக்களின் கல்வி முன்னேற்றத்திற்கான உதவிகளைச் செய்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இன்னும் பல வேலைத்திட்டங்களை எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்க விருப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a comment