அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், நிதிமோசடி பிரிவு கலைக்கப்பட வேண்டும் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்?

  • அப்துல் மஜீத் முஹம்மட் பர்சாத்

hizbullahகடந்த மஹிந்த ராஜபக்ச கொடுங்கோள் ஆட்சியில் நடந்த நிதி மோசடிகளை
விசாரிக்க விசேடமாக நிதி மோசடி பிரிவு FCID ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும்
பெப்ரவரி 13ம் திகதி ஒரு வருடம் பூர்த்தி அடையவுள்ளது. இந்த நிலையில் நாட்டில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக பல அமைச்சர்கள்,பலநிறுவனங்கள், மஹிந்த ராஜபக்ஸவின் குடும்பம் உட்பட பலர்
விசாரணைக்கும்,வாக்குமூலமும் பெறப்படுகிரது. அன்மையில் யோசித்த ராஜபக்ச FCIDயினால் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

CSN தொலைக்காட்சிக்கு அரச நிதியை பயன்படுத்தினார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு நாட்டை சூரையாடியவர்களை பாகுபாடியின்றி சட்ட நடவடிக்கை
எடுக்குமாறு சகல அதிகாரமும் ஜனாதிபதியால் FCIDக்கு வழங்கப்படுள்ளது.

இந்த தருனத்தில் தற்போதைய சூழலில் FCID கலைக்கப்பட வேண்டும் என்று
மஹிந்த ரெஜிமன்ட் எல்லோரும் ஒன்று சேர்ந்து தேங்காயையும் கலவெடுத்து
தேங்காய் உடைக்கும் நிலமைக்கு வந்துள்ளார்கள்.

இதற்கு ஆதரவாக சமூகத்தை வழமையாக காட்டிக்கொடுக்கும் இராஜாங்க அமைச்சர்
M.L.A.M ஹிஸ்புல்லாவும் கைகோர்துள்ளார்.
இதன் மூலம் மீண்டும் மஹிந்த_ரெஜிமன்ட் யில் தானும் என நிரூபிக்குகிரார்.

நாட்டின் இன்றைய நிலவரப்படி
ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்
FCID கலைக்கப்பட வேண்டுமா ?
அல்லது சிங்களே ? BBS ? கலைக்கப்பட வேண்டுமா என்று அறிக்கை விட வேண்டும்.
FCIDயால் முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு பிரச்சினை நடப்பதாக தெரியவில்லை இந்த
தருனத்தில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மாத்திரம் அறிக்கை விட்டு
இருப்பதன் மர்மம் என்ன ???

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் FCIDகலைப்பட வேண்டும் என பிரதானமாக முன்
வைக்கும் காரணம் இரண்டு

முதலாவது……

FCID குறிப்பிட்ட சிலரை பழிவாங்குவதாக சொல்கிரார்.

நீங்கள் FCID கலைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த கருத்தில் தான் ஊழல்
செய்யவில்லை என்றும் தான் நிரபராதியும் என்று தைரியமாக எங்கும்
சொல்லவில்லை.

அதனால்தான் குறிப்பிட்ட சிலரை பழிவாங்குவதாக
அறிக்கையில் குறிப்பிடுகிரார். அவ்வாறு FCID யாரை பழிவாங்கியுள்ளது ??
ஆதார பூர்வமாக நிரூபித்து அறிக்கை விடவும். மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியின்
பழிவாங்களை வேடிக்கை பார்த்த நீங்கள் தற்போது பழிவாங்கள் என
வாய்திறந்துள்ளது “குற்றம் உள்ள நெஞ்சுதான் குறு குறுகுக்குமே” ?? என
என்னத்தோனுகிரது……

அது போன்று அவர் அறிக்கையில்
இரண்டாவது குறிப்பிடும் காரணம்……
FCID சட்டத்துக்கு முரணாக அமைக்கப்பட்டுள்ளது என்கிரார்.

நாட்டின் காவல் துறையினர் அவர்களுக்குதேவையான பிரிவுகளை பிரித்து விசாரணை
செய்வது வழமை அந்த வகையில் பொலிஸ் தினைக்களத்தில் போக்குவரத்து
பணிகளுக்கு போக்குவரத்து பிரிவு போதைவஸ்து தடுப்புக்கு போதை வஸ்து பிரிவு
சிறு குற்றம்களுக்கு சிறுகுற்றப்பிரிவு பெரும் குற்றங்களுக்கு பெரும்
குற்றபிரிவு அதுபோன்று கடந்த ஆட்சியில் நடந்த நிதிமோசடிகளை விசாரணை
செய்ய ஜனாதிபதி விசேடமாக நிதி மோசடி பிரிவு உருவாக்கியுள்ளார் அவர்கள்
அனைத்து விடயம்களையும் நாட்டின் நீதி துறைக்கு கட்டுப்பட்டு
செயட்படுகிரார்கள். இது எந்த வகையில் சட்டத்து முரண் ???

FCIDயை கலைக்க வேண்டும் என்று மஹிந்த தரப்பு அரசியல்வாதிகள் போராடுவதும்
தேங்காய் உடைப்பதும் அவர்கள் மீதுள்ள அச்சத்தால் அந்த வகையில்
ஹிஸ்புல்லாஹ் நிதிமோசடி
FCID கலைக்கப்பட வேண்டும் என்பது அச்சத்திலா ?? என்று பலர் மத்தியில்
கேள்வி எழும்ப ஆரம்பத்துள்ளது ??

கடந்த காலங்களில் ஊழல் சம்பந்தமாக ஹிஸ்புல்லாஹ் அறிக்கை விடும்போது ஒரு
ரூபாய் ஊழல் செய்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு ஒதுங்குவேன் என்று
வீராப்பு அறிக்கை விட்ட நீங்கள் இன்று FCID கலைக்கப்பட வேண்டும் என்பது
உங்கள் மீது FCIDயை திரும்பி பார்க்கவைத்துள்ளது.

தற்போதைய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விமான நிலையத்தின் தலைவராக
இருக்கும்போது மனைவியின் பெயரில் விமான நிலைய பதவியை வைத்துக்கொன்டு
சாட்சியாகவும்,அப்பதவியை சாட்சியாக வைத்து மனைவியின் பெயரில்
செலிங்கோவில் எடுத்த பணத்தை மனைவி கட்ட தவரினால் 07 நாட்களில் தான்
செலுத்துவதாக சொல்லி செலிங்கோவில் பல லட்சங்களை துரோகம் செய்தது .உழல்
மோசடிளை பிடிக்கும் FCID நிறுவனமும் அறிந்திருக்க கூடும்.

அது மாத்திரம் அல்ல அவர் கூடவே இருந்த தற்போதைய கிழக்கு மாகண சபை
உறுப்பினர் சிப்லிபாறுக் அவர்கள் சொல்கிரார் ஹிஸ்புல்லாவின் ஊழல் தன்வசம்
இருப்பதாகவும் தேவை ஏற்பட்டால் தேவையான இடத்தில் நிரூபிக்க தயாராக
இருப்பதாகவும் என்று பகிரங்கமாக கூறியும் உள்ளார்.

நல்லாட்சியின் இராஜாங்கஅமைச்சராக இருந்துகொன்டு ஜனாதிபதியின் ஊழல்
விசாரணைக்கு ஒத்துளைப்பு வழங்காமல் மீண்டும் தான் மஹிந்தவின்
விசுவாசிதான் என்று நிரூபித்தும் விட்டீர்கள்.

முஸ்லிம்களாகிய நாம் தமது சொந்த வாழ்வில் ஹராம்,ஹலால் பேனியும் வட்டியை
கூட புறக்கனித்து வாழும் போது நாட்டின் நிதியை மோசடி செய்தவர்கள்
நிதிமோசடி பிரிவின் மூலம் விசாரணை செய்து சட்டத்துக்கு முன் நிறுத்த நாம்
நிதி மோசடி பிரிவிக்கு நமது ஒத்துளைப்புகளை வழங்க வேண்டும்.

நிதி மோசடி என்பது……
மக்களுடை பணத்தை மோசடி செய்ததுதான் நாம் அன்றாட வாழ்க்கையில் அரசுக்கு
வரியாக கட்டும் நம் பணத்தைதான் அரச பணம் என்கிரோம்.
மாராக அரசியல்வாதிளின் சொந்த பணம் கிடையாது ஆகையால் நமது வரிப்பணங்களை
ஊழல் செய்தவர்கள் சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் அது முன்னால்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவாக இருந்தாலும் சரி ……

ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் நாட்டை அதிகாரத்தால்
கட்டுப்படுத்தியதும்,மக்களின் பணத்தை சூரையாடியதும்
போன்ற விடயம்கள் மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியுடன் முடிவுக்கு கொண்டு
வரப்பட வேண்டும்.

நாட்டில் நடைபெற்ற ஊழல் விடயங்களை விசாரிக்க முஸ்லிம்களாகிய நாம் நமது
பூரண ஒத்துழைப்பை அரசாங்கத்துக்கு வழங்குவோம்.

“நாட்டின் நிதியை மோசடி செய்தவர்கள்தான் நிதிமோசடி பிரிவாகிய #FCIDயை
பார்த்து பயப்பட வேண்டும் மாறாக ஏனையவர்கள் அல்ல”

Published by

Leave a comment