ஹோமாகம: பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இன்று (09) பிணையில் விடுதலை செய்யப்பட்டார். ரூபா 2 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணையின் அடிப்படையில் அவரை விடுதலை செய்வதாக ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க அறிவித்தார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பில் வழக்கு விசாரணை இடம்பெற்றபோது, ஹோமாகம நீதிமன்றை அவமதிக்கும் வகையில் அவர் நடந்துகொண்டதாகத் தெரிவித்தே அவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Leave a comment