பிழையில்லாத பிழைகள்

A-hand-writing-with-a-pen-006[1]அவுலியா சியாரத்தில்
அறிவித்தல் ஒன்று
‘இங்கு என்னை(ண்ணை) விற்கப்படும்’

வழக்கு மண்டபத்தின்
வாசலில் பெயர்.
காதிக் ‘கேடு’

அரச அலுவலகத்தில்
அழகான வரவேற்பு
‘அன்புடன் ‘அலை’க்கிறோம்’

வரவு செலவு விவாதத்தில்
வரி அறவிடுதல் ‘குரை’க்கப்பட்டது’

பள்ளிப் பலகையில்
விளம்பரம்.
குறித்த கடைகள்
‘குற்ற’-கைக்கு
கொடுக்கப்படும்.

பாடசாலை லொக்கில்
பதியப் பட்டது
மாணவர் சக்தியைக் ‘கொன்று(ண்டு)’
மாபெரும் சிரமதானம்.

திணைக்களப் பலகையில்
தெளிவாக இருந்தது
ஊழல் ‘மேச அடி’
ஒழிப்போம்.

இசைக் கருவியின் பெயர்
எழுதப் பட்டது
‘புள் லோங் குழல்”

எதிர்க்கட்சித் தலைவர்
இப்படி எழுதினார்.
‘இதற்குப் பதிலாய்
‘மாட்டு (ற்று)’ அரசை
மக்களுக்குத் தருவோம்.

புகையிரத நிலையத்தில்
போட்டிருந்தார்கள்.
‘பிராணி’கள் மலகூடம்’

ஆண் பெண் நடனம் பற்றி
அழகிய விளம்பரம்.
இங்கு காபரே நடனம் கற்றுக் ‘கெடுக்கப்படும்’

அரசியல் தொண்டன்
ஆக்ரோசமாய்க் கூறினான்
தலைவன் சிறந்த ‘(மே)மோடை’ப் பேச்சாளன்.

விபத்துச் சாலையில்
வேண்டுமென்றே போட்டார்களோ?
பிரதான ‘விதி’.

அமெரிக்கா கோதுமையை
அன்பளிக்கும் மாநாடு.
மா ‘பெறும்’ மாநாடு.

  • MOHAMED NIZOUS

Published by

One response to “பிழையில்லாத பிழைகள்”

Leave a reply to zafras Cancel reply