தாருல் அதரின் அத்வைத மற்றும் ஷியாக்கள் விழிப்புணர்வு இஸ்லாமிய மாநாடு காத்தான்குடியில்-பெரும் திரளான மக்கள் பங்கேற்பு

Dharul atharபழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் தாருல் அதர் அத்தஅவிய்யா இஸ்லாமிய தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் அத்வைத மற்றும் ஷியாக்கள் விழிப்புணர்வு இஸ்லாமிய மாநாடு ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்தில் (குட்வின் சந்தியில்) இடம்பெற்றது.

மேற்படி அத்வைத மற்றும் ஷியாக்கள் விழிப்புணர்வு இஸ்லாமிய மாநாட்டில் மார்க்கப் பிரச்சாரகர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.அஸ்ஹர் (மின்ஹாஜி) ‘இஸ்லாத்தில் துழைந்த அத்வைதம்’ எனும் தலைப்பிலும், பிரபல மார்க்கப் பிரச்சாரகர் அஷ்ஷெய்க் எஸ்.எம்.அப்துல் ஹமீத் (ஷரயி) ‘யார் இந்த ஷியாக்கள்?’ எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

Dharul athar

இங்கு தாருல் அதர்அத்தஅவிய்யா அமைப்பின் பொதுச் செயலாளர் எம்.எஸ்.எம்.நஸாரினால் 13 முக்கிய விடயங்கள் அடங்கிய அத்வைத மற்றும் ஷியாக்கள் விழிப்புணர்வு இஸ்லாமிய மாநாட்டின் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டதாக தாருல் அதர்அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ.றவூப் தெரிவித்தார்.

Dharul athar

இம் மாநாட்டில் பெரும் திரளான இஸ்லாமிய பொது மக்கள் கலந்து
கொண்டனர்.

குறித்த மாநாட்டில் பொலிசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment