கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவரை ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடுத்த முயன்றதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி பிரிவில் இடம்பெற்று வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றை வழங்க இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ் இன்றைய தினம் (18) அழைக்கப்பட்டிருந்தார்.
ஆயினும், தன்னால் இன்று, சமூகமளிக்க முடியாததால் மற்றுமொரு தினத்தை வழங்குமாறு FCID இடம் கோரியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ரங்கன ஹேரத் மற்றும் குசல் பெரேரா ஆயிக இருவர் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள குறித்த ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் அஞ்சலோ மெத்திவ்ஸ் நாளைய தினம் (19) FCID இல் வாக்குமூலம் வழங்குவதற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் ஜெரி வௌடர்ஸ் இன்று FCID இல் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment