நாளை நமதே

  • அபூ சுஹா

rishad in puttalam hospitalஇலங்கை முஸ்லிம்களின் எதிரகாலம் தொடர்பில் நம்பகத்தன்மையுடன் நடக்கக் கூடிய கட்சியொன்றின் தேவைப்பாடு உணரப்பட்டு இன்றுடன் பலவருடங்கள் உருண்டோடியுள்ள நிலையில் புதிய கட்சியினை ஏற்படுத்தி அதனை சமூகத்திற்காக விதைப்பது என்பது நீண்ட காலமொன்றினை எடுக்கும் என்பது யதார்த்த்தின் உண்மையாகும்.

இந்த வகையில் இலங்கையில பெரும்பான்மை கட்சிகளில் இருந்து முஸ்லிம் அரசியல் தலைமைகள் அந்த கட்சிகளின் கொள்கைக்கு ஒப்பவே செயற்பட்டதை காணலாம்.கட்சிக் கொள்கையே தமது கொள்கையாக கொண்டு செயற்பட்டுவந்த வரலாற்றினை எம்மால் பார்க்கமுடிந்தது.

இவ்வாறான நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோற்றம் அதன் பின்னரான அஷ்ரப் அவர்களின் மறைவு உள்ளிட்ட பல சம்பவங்களை நாம் காணலாம்.அதன் பிற்பாடு கட்சியின் தலைமையின் தீர்மாண சக்தி ,பேரம் பேசும் சக்தியின் வீச்சின் இறக்கம் உள்ளிட்ட பல விடயங்கள்முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு போதுமான உந்துசக்தியாக இருந்ததில்லை என்கின்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கின்றதை இங்கு கூறுவதன் மூலம் சில நியாயங்களை தொடர்புபடுத்தலாம் என விளைகின்றேன்.

இலங்கையின் அரசியலில் முஸ்லிம்களின் வாக்குகள் தீர்க்கமானதொரு சக்தியாக இருந்துள்ளதை நாம் ஒரு போதும் குறைத்து மதிப்பிட்டு பேச முடியாது.அது அண்மையக்கால மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி உருவாக்கம் அதன் பின்னரான ஆட்சியின் மாற்றம் என்பன முக்கிய சாதனமாக இருந்துள்ளது.அது போல தற்போதைய ஜனாதிபதியின் வருகைக்கும் முஸ்லிம்கள் ஆற்றியுள்ள பங்களிப்பினை குறைத்து மதிப்பிடமுடியாது.

rishad puttalam

சிலர் முஸ்லிம்கள் தொடர்பில் பிழையான கருத்துாட்டல்களை செய்துவருவதும்,அதற்கு ஆட்சியின் உயர் பிடத்தினர் கூட தலைசாய்ப்பதும் பழகிப்போன சாதமாகிற்று.

அதில் இருந்து விடுபட்டு முஸ்லிம் சமூகத்தின் உணர்வகளை நாடி பிடித்து பார்த்து அவர்களது கெரவமான தேவைகளை பெற்றுக்கொடுப்பதற்குமாக ஆரம்பிக்கப்பட்ட கட்சி தான் அகிலஇலங்கை மக்கள் காஙகிரஸாகும்.கடந்த பொதுத்தேர்தலின் பிற்பாடு கட்சிக்குள் உள்ளவர்கள் பதவி நிலைகளை பெற்றுக்கொள்வதில்காணப்பட்ட இழுபறி நிலையினால் சில சதிகளை கட்சியின் தலைமை சந்திக்க நேரிட்டுள்ளது.நாட்டில் மீண்டும் இனவாத சக்திகளின் தீட்சயம் தலைவிரித்து ஆட முற்பட்டிருக்கும் போது கட்சியின் தலைமைத்துவத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் படும் மோசமான விசமத்தனமான பிரசாரங்களை முறியடித்து எமது சமூகத்திற்கு பொருத்தமான தலைமைகளை தெரிவு செய்ய வேண்டியது காலத்தின் தேவைாயகும்.

இந்த நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவராக இருக்கும்அமைச்சர் றிசாத் பதியுதீன் எந்தவகையில் தலைமைத்துவத்துக்கு தகுதியற்றவர் என்பதை அரசியல் அந்தஸத்துக்கள் இல்லாத சிலர் பரப்பி வருகின்றமை எமது சமூகத்தின் பல துறைகளை பலவீனப்படுத்தும் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது ஏற்பட்டுள்ள போட்டித்தன்மையின் கட்சியின் தலைமைத்துவம் கட்சியின் செயலாளராக இருந்த ஹமீட் அவர்களுக்கு செல்லும் எனில் அந்த கட்சியின் உயிரோட்டம் என்பது பூஞ்யமானதாகும்.வெறும் பத்திரிகை அறிக்கையினை வைத்துக்கொண்டு எதனையும செய்ய முடியாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.இந்த கட்சி என்பது நாட்டு மக்களுக்குரியதாக மாறியுள்ளது.சவால் விட்டு ,அறிக்கை விட்டு இக்கிட்சியினை இலக்கினை முறியடிக்கும்செயற்பாடுகளுக்கு கட்சியின் போராளிகள் ஒரு போதும் இடம் கொடுக்கமாட்டார்கள்.

இந்த வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை குருநாகலயில் இடம் பெறும்கட்சியின் பேராளர் மாநாட்டில் கலந்து கொள்ளும் போராளர்கள் இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்கு அடித்தளத்தினை இடுவதுடன்,தேவையற்ற கட்சிக்குள் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் சக்திகளை அதிலிருந்து விடுபடச் செய்யும் ஒத்த கொள்கையினை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பாரக்கப்படுகின்றது.

Published by

Leave a comment