தெஹ்ரான்: ஈரானிய கடற்பரப்பில் நுழைத்ததற்காக கைது செய்யப்பட்ட 10 அமெரிக்க மாலுமிகளை தாம் விடுவித்துள்ளதாக தற்போது ஈரானிய அரச தொலைக்காட்சி அறிவித்துள்ளது. அமெரிக்காவிடம் இருந்து இந்தச் சம்பவம் தொடர்பாக தம்மிடம் மன்னிப்பு கோரப்பட்டதாக ஈரான் முன்னதாக அறிவித்திருந்தது.
அமெரிக்க மாலுமிகள் ஈரானிய கடற்பரப்பினுள் நுழைந்தது தொடர்பாக அமெரிக்கா மன்னிப்பு கோரியதாக ஈரானிய படைகளின் கடற்படை தளபதியான ஜெனரல் அலி ஃபதாவி கூறியிருந்தார். கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களில் 9 ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குகின்றனர்.
வளைகுடாவில் குவைத்துக்கும், பஹ்ரைனுக்கும் இடையில் இந்த மாலுமிகள் ஒரு பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே, படகில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஈரானிய கடற்பரப்பில் அனுமதியின்றி நுழைந்ததாக கூறப்படுகின்றது.
Leave a comment