பட்டதாரிகளை மாவட்டத்திற்குள் நியமிக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் நடவடிக்கை

  • ஹாசிப் யாஸீன்

hareesஅம்பாறை: பயிலுநர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கொழும்பு பிரதேசத்தில் நியமிக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்ட பட்டதாரிகளை சொந்த மாவட்டத்தில் நியமிக்க விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நடவடிக்கை எடுக்கவுள்ளார்.

அம்பாறை மாவட்ட பட்டதாரிகளுக்கு பயிலுநர் பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் நேற்று முந்தினம் அலரி மாளிகையில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

இதில் நியமனம் பெற்றுள்ள அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் எவரும் சொந்த மாவட்டத்தில் நியமிக்கப்படாமை வருத்தத்துக்குரிய விடயமாகும் என தெரிவித்த பிரதி அமைச்சார் ஹரீஸ், குறிப்பாக பெண்கள் ரூபா 10 ஆயிரம் கொடுப்பனவுடன் மாவட்டத்திற்கு வெளியில் கடமையாற்றுவதானது கடினமான விடயமாகும்.

இவ்விடயத்தில் கவனமெடுத்துள்ள பிரதி அமைச்சர் ஹரீஸ், பட்டதாரிகளை அம்பாறை மாவட்டத்திற்குள் நியமிப்பதற்கு பொது நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மதும பண்டாரவை சந்தித்து பேசவுள்ளார்.

நியமனம் பெற்றுள்ள அம்பாறை மாவட்ட பட்டதாரிகளின் தகவல்கள் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் அலுவலகத்தினால் சேகரிக்கப்படுகின்றது.

எனவே பட்டதாரி நியமனம் பெற்றவர்கள் தங்களது தகவல்களை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.எஸ்.எம்.மிஸ்பரை தொடர்பு கொண்டு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Published by

Leave a comment