-
இர்ஷாட் ஏ. காதர்
காத்தான்குடி: கடந்த பொதுத்தேர்தலுடன் ஊரைவிட்டுச் சென்ற “நல்லாட்சிக்காரங்க” அடுத்த தேர்தல் எதிர்நோக்கியிருக்கும் இந்நிலையில் மீண்டும் ஊருக்குத் திரும்பியிருக்காங்க. நல்லாட்சியின் ஒருவருட பூர்த்தியை பயன்படுத்தி ஊருக்குள் நுழைந்திருக்கும் இவ்வியக்கத்தின் அறிக்கைகள் தற்பொழுது ஊடகங்களில் வழமைபோன்று வெளிவருவதையும் காணமுடிகிறது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்போன்று தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்கள் முன்தோன்றும் அமைப்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) இன்று மக்கள் மத்தியில் மாறிஇருப்பதை அவதானிக்க முடிகிறது.
ஊர் அரசியலை கைவிட்டு, தனது கல்லூரியில் கல்வி கற்ற, கல்வி பயிலும் மாணவர்களை நம்பி, அகில இலங்கை ரீதியில் போட்டியிட்டு பாராளுமன்ற ஆசனத்தைக் கைப்பற்ற எடுத்த நடவடிக்கைகள் தவிடுபொடியாகிப்போன நிலையில், உள்ளுராட்சித் தேர்தலை நோக்கி மீண்டும் இவ்வியக்கம் ஊருக்குள் வந்திருக்கு.
கடந்த 2010 உள்ளுராட்சித் தேர்தலுடன் ஊர் அபிவிருத்தியை துறந்து அகில இலங்கையைக் குறிவைத்த ந.தே.மு., தான் கண்ட கனவுகளை நனவாக்க முடியாமல் தடுமாறுகிறது.
பகுதி நேர (part time) அரசியலாக இயங்கும் இக்கட்சி, தேர்தல் காலங்களில் போட்டியிடுவதும், தோற்பதும் வாடிக்கையாகிவிட்டதால், சுமார் 2006 காலப்பகுதியில் காத்தான்குடியில் இக்கட்சிக்கு இருந்த சுமார் 6000க்கும் அதிகமான வாக்குகள், தற்பொழுது 3000க்கும் குறைவாகக் காணப்படுகிறது.
தான்மேற்கொண்ட உள்ளுர் அபிவிருத்திகளைக் கைவிட்டமை, குடும்ப அட்டை மற்றும் அப்பியாசக்கொப்பிகள் வழங்கள் நிறுத்தப்பட்டமை போன்ற காரணங்களாலும், ஊரைவிட்டு, அகில இலங்கையை நோக்கி நகர்ந்ததும், இஸ்லாமிய அரசியல் என கூறிக்கொண்டு, தனது கல்லூரியை ஆங்கிலக் கலாச்சாரத்தை நோக்கி நகர்த்திச் செல்கின்றமை, விடுமுறை அரசியல் போன்ற பற்பல காரணங்களால் ந.தே.மு. யின் ஆதரவுகள் சரிந்துவிட்டன. இனிமேல் இக்கட்சிக்கு தனது வாக்குவங்கியை அதிகரிக்கச்செய்வதென்பது நினைக்கமுடியாத சவால்களை எதிர்கொள்ளவேண்டிவரும்.
கடந்த காலங்களில் காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ்வுக்கு அடுத்த இடத்தில் இருந்த ந.தே.மு. க்கான ஆதரவுகள், தற்பொழுது சிப்லி பாரூக்கை நோக்கிச் சென்றாலும், 3ம் இடம் ஒன்று வெற்றிடமாகவே இருக்கின்றது. இதன் பின்னர் 4ம் இடத்தில் மீண்டும் நல்லாட்சிக்காரங்க பிடிப்பாங்களா அல்லது முஸ்லிம் காங்கிரஸ் பிடிக்குமா என்ற நிலையில் நல்லாட்சிக்காரர்களின் அரசியல் நிலைமை பரிதாபகமாகக் காணப்படுகிறது.
இளைய தலைமுறை ஒன்றுக்கான வெற்றிடம் யுவர்காத்தான்குடி இனியவன் தேர்தல் கணிப்பின்படி காத்தான்குடியில் காத்திருக்கிறது. சிறந்த ஆளுமையுள்ள இளைஞர்களால் மதிக்கப்படுகின்ற ஒரு நபர் எதிர்வரும் தேர்தலில் களமிறங்கினால் அவர் இரண்டாம் இடத்தையோ அல்லது முதலாம் இடத்தையோ பெறக்கூடிய அதிக வாய்ப்புக்கள் காத்தான்குடி தேர்தல் களத்தில் காணப்படுகிறது.
அரசியலை பகுதி நேரமாக செய்துவரும் ந.தே.மு. யின் மீள் வருகை எதிர்காலத்தில் எவ்வாறு அவர்களுக்கு கைகொடுக்கப்போகிறது என்பதே கேள்விக்குறியாகும்.
-
யுவர்காத்தான்குடிக்காக இர்ஷாட் ஏ. காதர்
காத்தான்குடி: கடந்த பொதுத்தேர்தலுடன் ஊரைவிட்டுச் சென்ற “நல்லாட்சிக்காரங்க” அடுத்த தேர்தல் எதிர்நோக்கியிருக்கும் இந்நிலையில் மீண்டும் ஊருக்குத் திரும்பியிருக்காங்க. நல்லாட்சியின் ஒருவருட பூர்த்தியை பயன்படுத்தி ஊருக்குள் நுழைந்திருக்கும் இவ்வியக்கத்தின் அறிக்கைகள் தற்பொழுது ஊடகங்களில் வழமைபோன்று வெளிவருவதையும் காணமுடிகிறது.
Leave a comment