கிழக்கு மாகாண அரசிற்கு உற்பட்ட பாடசாலைகளில் தளபாடங்கள் பற்றாக்குறையாக இருந்து வருகின்றது. இதனால் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அசௌகரியங்களை அனுபவித்து வருவதாக மாணவர்களின் பெற்றோர்கள் வேதனைப்படுகின்றார்கள்.
ஆசிரியர்களும் அக்கறை இல்லாதவர்கள் போல் அலட்சியமாய் இருந்து வருகின்றனர். இங்கு இருக்கின்ற குறைபாடுகளை மேல் இடங்களுக்கு அறிவிக்காமல் மாகாண கல்வி அமைச்சு இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். கிழக்கு மாகாண சபை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
முதலமைச்சர் அவர்கள் முதல்வராக பதவியேற்றதிலிருந்து எவ்வித பாரிய அபிவிருத்திகளையும் இது வரையில் செய்யவில்லை என்று மக்கள் அங்கலாய்க்கின்றனர். பல கிராமவாசிகள் குறைகூறிக்கொண்டிருக்கின்றனர். மேலும் எதிர்கால அரசியல் நிலமை முதல்வருக்கு சவாலாக அமையலாம் என்றும் என்னிடம் பேசுகின்றனர்.
பாடசாலைகளின் குறைபாடு மட்டுமல்ல வீதி அபிவிருத்திகளும் மிக மோசமான நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். சென்ற வருடம் (2015) கிழக்கு மாகாண சபை அரசினால் எந்தவித அபிவிருத்திகளையும் அந்த நிருவாகமும் மேற்கொள்ளவில்லை. நல்லாட்சி அரசாங்கம் வந்து 1 வருடம் பூர்த்தியாகிவிட்டது.
மாகாண அரசாங்கம் 03 வருட பூர்த்தியை அடைந்தும் கிராமங்களில் பாரிய குறைபாடுகள் இருந்து வருகின்றது. இவற்றை ஒரு தடவையாவது கிராமங்களுக்கு சென்று அங்குள்ள குறைபாடுகளை இதுவரைக்கும் கண்டுகொள்ளவில்லை என்று மக்களின் குமுறல்கள் வேதனையாக இருக்கின்றது. தயவுசெய்து மக்களின் குறைகளை முதல்வர் அவர்கள் கண்டுகொள்ளவேண்டும்.
MIM Zarook JP
பிராந்திய அமைப்பாளர், SLMC
காங்கேயனோடை
Leave a comment