கொழும்பு: பொதுமக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் நேரடியாக சமர்ப்பிக்க முடியுமான ”ஜனாதிபதியிடம் தெரிவிக்க” எனும் நேற்று முன்தினம் (08) ஆரம்பிக்கப்பட்ட முறைப்பாடு தெரிவிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களில் 3,200 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்க ஊடகநிலையம் அறிவித்துள்ளது.
குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வரும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
1919 அவசர இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அல்லது தபால் பெட்டி இலக்கம் 123 எனும் முகவரி மூலம் அஞ்சல் வழியாக, பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் http://www.tell.president.gov.lk மற்றும் http://www.president.gov.lk எனும் இணையத்தளங்களின் ஊடாகவும் மற்றும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கிற்கு தனிப்பட்ட செய்தியினை வழங்குவதன் ஊடாகவும் பிரச்சினைகளை சமர்ப்பிக்க முடியும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment