முகைதீன் மெத்தை பெரிய ஜூம்ஆப்பள்ளிவாயலில் விஷேட துஆ பிரார்த்தனை

  • எம் எச் எம் அன்வர்

Pray duaகாத்தான்குடி: நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்று ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு நாடு பூராகவும் சமய அனுஸ்டானங்களும் விஷேட நிகழ்வுகளும் இடம்பெற்றன
இந்த வகையில் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நேற்று காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜூம்ஆப்பள்ளிவாயலில் விஷேட துஆ பிரார்த்தனையும் மர நடுகை நிகழ்வும் ஜூம்ஆ தொழுகையின் பின்னர் இடம்பெற்றது.

இந்ந நாட்டில் முஸ்லிம்கள் நிம்மதியாகவும் அமைதியுடனும் வாழவேண்டும் எனவும் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன முஸ்லிம்களிடத்தில் கரிசனையுடன் நடந்துகொள்ள அல்லாஹ் துணைபுரிய வேண்டும் எனவும் துஆப்பிரார்த்தனையின்போது வலியுறுத்தப்;பட்டன.

Pray dua

மேற்படி நிகழ்வில் காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் ஏ சி அகமட் அப்கர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன தலைவர் ரவூப் ஏ மஜீட் பிரதித் தலைவர் சட்டத்தரணி அப்துல் ஜவாத் பி ஏ ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் ஏ எல் அப்துல் காதர் பலாஹி கல்விப்பணிப்பாளர் எம் ஏ சி எம் பதுர்தீன்  உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

Dua metahippalli

Published by

Leave a comment