இரத்ததானம் வழங்கள்

msw bloodஅன்புப் பொதுமக்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.

எமது MSW அமைப்பினால் இரத்ததானம் வழங்கும் நிகழ்வொன்று இன்ஸாஅல்லாஹ் எதிர்வரும் 03/01/2016 அதாவது வருகின்ற ஞாயிற்றுக் கிழமை காலை 8.00 மணி தொடக்கம் மதியம் 1.00 மணிவரை காத்தான்குடி மெத்தைபள்ளி வித்தியாலயத்தில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

எனவே மேற்படி நிகழ்வில் இரத்ததானம் வழங்க விரும்பும் சகோதர சகோதரிகள் குறிப்பிட்ட கால நேரத்திற்குள் எமது இரத்ததான முகாமுக்கு வருகை தருமாறு அன்பாய்க் கேட்டுக்கொள்கின்றோம்.

• எவரொருவர் ஓர் உயிரை வாழவைக்கிராறோ, அவர் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவராவார்’. (அல் குர்ஆன்)

• ‘எவர் ஒருவர் இவ்வுலகில் ஒரு நம்பிக்கையாளரது துன்பத்தினை தீர்த்துவைப்பாரோ, இறுதிநாளில் அவருக்கு ஏற்படும் மிகப் பெரிய துன்பத்தினை அல்லாஹ் தீர்த்துவைப்பான், மேலும் அவர் துன்பப்பட்டவருக்கு உதவி செய்துகொண்டிருக்கும் காலமெல்லாம் அவருக்கு அல்லாஹ் உதவி செய்து கொண்டிருப்பான்’.(ஹதீஸ்)

msw blood

எனவே, இஸ்லாத்தின் பார்வையில் ஒரு சமூகத்‌திற்கு இரத்தம் தேவைப்படும் போது இரத்ததானம் செய்வது தனிப்பட்ட ரீதியிலும் சமூக அளவிலும் ஒரு கட்டாய கடமையாக அமைகிறது.

msw

குறிப்பு :
• வரும்பொழுது தங்களது தேசிய அடையால அட்டையை தவறாமல் காொண்டுவரவும்.

• பெண்களுக்கான பிரத்தியோக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

நன்றி

இப்படிக்கு,
தலைவர்/செயலாளர்
சமுக நலன் பேணும் அமைப்பு MSW
காத்தான்குடி.

Published by

Leave a comment