வரக்காபொலை: சம்மாந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த வேன் ஒன்று, பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்துள்ளனர். இன்று (30) அதிகாலை வரக்காபொலை, தும்மல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற இவ்விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரு குழந்தை மற்றும் 3 பெண்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்மாந்துறையைச் சேர்ந்த இவர்கள், உம்றா செல்வதற்காக, கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் பொருட்டு கொழும்பு வந்த வேளையிலேயே இவ்வாறு விபத்தில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment