காத்தான்குடி ஒஸா அமைப்பினது ஐந்தாவது ஆண்டு பூர்த்தி விழா

Osaகாத்தான்குடி: காத்தான்குடி ஒஸா அமைப்பினது ஐந்தாவது ஆண்டு பூர்த்தி விழா கடந்த 24.12.2015 பி.ப 4.00 மணியளவில் ஹிஸ்புழ்ழாஹ் மண்டபத்தில் அமைப்பினது தலைவரும் சமூக சேவையாளருமான இல்மி அஹமட் லெவ்வை தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்க மாகாண முதலமைச்சர் கௌரவ அல்ஹாபிழ் நஸீர் அஹமட் அவர்களும் முதன்மை அதிதியாக BCAS கல்வி நிறுவனத்தின் முதல்வர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

அவர்களும் ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர் மௌலவி எம்.ஏ.அப்துல் காதர் பலாஹி , மத்தியஸ்தர் சபைத்தலைவர் எம். ஐ. உஸனார் , மற்றும் அமைப்பினது பொருளாளர் அல்ஹாஜ் எம்.எம்.எம். தாஹிர் , உறுப்பினர் மௌலவி பைறூஸ் பலாஹி , உபதலைவர் எம்.ஐ.நஸார் உற்பட மற்றும் ஊரின் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்
இந்நிகழ்வில் தேவையுடைய தமிழ் முஸ்லிம் மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்கி வைக்கப்பட்டதுடன் குறித்த விழாவை யொட்டி நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடம் வெற்றி பெற்ற கவிஞர்களுக்கு பணப்பரிசும் ஏனைய ஏழு கவிஞர்களுக்கு சான்றிதழ்களும்; வழங்கி கௌரவிக்கப்பட்டது

Osa

அத்துடன் விழா அரங்கில் நடாத்தப்பட்ட வினாவிடைப் போட்டியிலும் வெற்றியீட்டிய பதினைந்து பேருக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது

கவிதைகள் விமர்சனத்தை பன்னூல் ஆசிரியர் எம்.எம். மஹ்றூப் கரீம் , அவர்களும் , வினாவிடைப் போட்டியை ஓய்வ்வு பெற்ற கல்வி நிருவாக சபை உத்தியோகத்தர் எம்.எச்.ஏ.எம். இஸ்மாயில் அவர்களும் தலைமை ஏற்று மிகவும் சிறப்பாக நடாத்தினார்கள்
இவ் அமைப்பு சமூகத்தில் நலிவுற்ற மக்களுக்காக தொடர்சியாக ஆக்கபூர்வமான சமூக மேம்பாட்டு பணிகளை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கதாகும் இந்நிகழ்வு கடந்த ஐந்து வருடங்களுக்குள் இடம் பெறும் 35வது உதவி வழங்கும் நிகழ்வாகும்.

Osa

Published by

Leave a comment