கொழும்பு: ‘லைவ் இவன்ற்ஸ் ஶ்ரீ லங்கா’ நிறுவனத்தை தடைப் பட்டியலில் (Black List) இணைப்பதாக கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி இடம்பெற்ற இலத்தீன் மொழி பாடகரான, ஸ்பானிய நாட்டின் என்றிக் இக்லிசியஸின் சர்ச்சைக்குரிய இசை நிகழ்ச்சிக்கான பொழுதுபோக்கு வரியை செலுத்தாமை தொடர்பிலேயே குறித்த நிறுவனத்தை தடைசெய்துள்ளதாக கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.
சுமார் ரூபா 29 மில்லியன் வரியே இவ்வாறு செலுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, கொழும்பு மாநகர சபை முதல்வர், குறித்த அறிவித்தலை பகிரங்கப்படுத்தினார்.
‘லைவ் இவன்ற்ஸ் ஶ்ரீ லங்கா’ நிறுவனத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்களில், முன்னாள் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர்களான சங்கக்கார மற்றும் மஹேல ஆகியோர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment