- அபூ சுஹா
கொழும்பு: நேற்று இரவு ஹிரு தொலைக்காட்சியில் வில்பத்துவில் முஸ்லிம் குடியேற்றம் என்னும் தலைப்பில் இடம் பெற்ற விவாதம் தொடர்பில் பல்வேறுபட்ட எதிரும்,புதிருமான கருத்துக்களை தற்போது காணமுடிகின்றது. உண்மையிலேயே இந்த வில்பத்து பிரச்சினையின் உருவாக்கத்தின் பின்னணியில் யார் இருக்கின்றார்களை என்பதை இந்த நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.இந்த பிரச்சினை வெளிவந்த போது அதனை அடக்குவதற்கு ஒரு தைரியமான தலைமைத்துவம் தேவைப்பட்டது.
அந்த தலைமைத்துவத்தினை அமைச்சர் றிசாத் பதியுதீன் வழங்கினார் அதனை ஒரு போபதும் எவரும் பிழையென கூறமுடியாது.காரணம் அவர் 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை வடக்கில் இருந்து வெளியேற்றியதில் அவரும் ஒருவர் என்பதை விட அவரது குடும்பமும் அதில் உள்ளடங்கியுள்ளது.இந்த இந்த நிலையில் இந்த மக்களின் 25 வருடகால வெளியேற்றம் பல இழப்புக்களை பலருக்கும் ஏற்படுத்தியுள்ளதை நினைவுபடுத்துவது பொருத்தமாகும்.
முஸ்லிம் சமூகத்திற்கான தலைமைகள் இன்று எதனை தேடிக்கொண்டிருக்கின்றது என்பது ஒரு கேள்வியாக இருக்கும் போது இந்த தலைமைத்துவம் வடக்கு முஸ்லிம்கள் தொடர்பில் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்ற கேள்விக்குமான பதிலையும் பெறவேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம்.
வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அவரக்களது சொந்த பிரதேசங்களிலேயே குடியேறிவருகின்றனர் என்ற உண்மையினை ஏற்றுக்கொண்டாலும்,ஒரு தர்க்கத்திற்hக இந்த குடியேற்றம் பிழையானது என்ற செய்தினை நாட்டில் உள்ள பெரும்பான்மை சமூகங்கள் மத்தியில் கொண்டு செல்லும் திட்டமிட்ட நடவடிக்கையின் வெளிப்பாடு தான் அண்மையில் விகார மகா தேவி பூங்காவின் முன்னாள் ஆனந்த சார ஹிமியினால் ஒழுங்கு செய்யப்பட்ட இனவாத ஆர்ப்பாட்டமாகும்.
இதன் மூலம் அவர்கள் எதிர்பார்த்தது,மீண்டும் அமைச்சர் றிசாத் பதியுதீனை தாக்குவதனால்,மீண்டும் எமது நாட்டிற்குள் ஒரு இனக்கலவரத்தை தோற்றுவிப்பதற்கான அடித்தளத்தினை இடுவதேயாகும்.அப்படிப்பட்டதொரு நிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் மிகவும் நிதானமாக சிந்தித்து அன்றைய தினமே பகிரங்க விவாதமொன்றுக்கு தயார் என அழைப்புவிடுத்தார்.
இந்த அழைப்பினை அல்லாஹ்அவருக்கு சாதகமானதாக ஆக்கி வைத்தான்.அல்ஹம்துலில்லாஹ்.எந்த குர்ஆனை பிழையாக விமர்;சித்த காவி உடைத்தறித்த சில பௌத்த பிக்குகள் அந்த குர்ஆனை கையில் ஏந்தியது மட்டுமன்றி அதனது பலத்தை தொலைக்காட்சியில் முழு சிங்கள சமூகத்திற்கும் எடுத்துக் காட்டினான்.இந்த நிலையில் இந்த பௌத்தத பிக்கு அமைச்சர் றிhசாத் பதியுதீனை அல்குர்ஆனில் சத்தியம் செய்ய வலியுறுத்தியமை இனிமேலும் எமது வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் இடம்பெறக் கூடாது என்ற உத்தரவாதத்தை பெற்றுக்கொள்வதே,அரசாங்கத்தின் ஆவணங்களும்,சட்டத்திட்டங்களும்,வில்பத்து காட்டுக்குள் முஸ்லிம்கள் குடியேறவில்லை என்று தெளிவாக தெரிவித்த போதும்,அதனையும் மீறி இந்த நாட்டு சிறுபான்மை முஸ்லிம் மக்களை அடக்கி ஆளத்துடிக்கும் இனவாதிகளின் மாபெரும் சதியின் வெளிப்பாடு தான் அன்றைய ஹிரு தொலைக்காட்சி விவாதத்தில் எதிரொலித்தவைகளாகும்.
வுpல்பத்துவில் துவங்கி இறுதியில் ஆனந்த சார ஹிமி அவர்கள் இறுதியில் முடித்த இடம் எது என்பதை நாமறிவோம்.இந்த ஆனந்த ஹிமி விவாhத்தில் தெரிவித்த கருத்துக்கள் மெட்டைத் தலைக்கும்,முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவதுமாக இருந்ததை காணலாம்.திட்டமிடப்பட்ட முறையில் முஸ்லிம்களையும்,அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களையும் ஓரங்கட்ட வேண்டும் என்று ஆனந்த சாரர் தேரருடன் இணைந்து செயற்பட்ட எம்மில் பலரை அடையாளப்படுத்த வேண்டியுள்ளது.
வேற்று மதத்தவனின் கையில் புனிதக் குர்ஆனை கொடுத்து அமைச்சர் றிசாத் ஒரு முஸ்லிம் எதைத்தான் சொன்னாலமு; அல்குர்ஆனை அவர் முன் வைத்து அதில் சத்தியம் பெற்றால் இந்த மீள்குடியேற்றத்தை தடுத்து தொடர்ந்தும் இனவாதிகளின் திட்டமிட்ட கரையோர கைப்பற்றலையும்,முஸ்லிம்களின் காணிகளையும் அபகரிக்கலாம் என்று நப்பாசைக் கொண்டு விவிவாதத்துக்கு வந்த ஆனந்த சார தேதரின் முகத்திரையினை கிழித்தெறிந்து,அல:குர்ஆனின் புனிதத்துவத்தை ஒரு இறைமறுப்பாளரிடத்தில் இருந்து பறித்தெடுத்த சமபவத்தின் நிஜத்தை இந்த விவாதத்தில் காணமுடிந்தது.
தனிப்பட்ட அரசியல் லாபங்களுக்காகவும்,அமைச்சர் றிசாத் பதியுதீனின் அரசியல் வளர்;சியிலும் காழ்புணர்ச்சி கொண்ட சக்திகள் நேற்றைய தொலைக்காட்சி விவாதத்தின் பின்னரும்,இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு நடக்கப் போகும் அநியாயத்தின் ஆரம்பமாக அங்கு தேரரினால் சுட்டிக்காட்டப்பட்ட( முஸ்லிம்களின் பெயர்களை அவரால் உச்சரிக்க முடியாதுள்ளதாம்,முஸ்லிம் இனவாத பெயர்கள் அவறுக்கு அருவெறுப்பாம்,முஸ்லிம் கொலனி வரப்போகின்றதாம்) போன்ற அவரது எண்ணதின் வெளிப்பாட்டினையும் உணராமல் இருப்பார்கள் என்றால் அவர்;களைப் போன்ற அழுக்கானவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்.
எனவே இணையத்தளங்கள் மூலமும்,முக நூல்கள் மூலமம், அரசியல் லாபம் தேடும் அடிவருடிகளும்,சமுதாய உணர்வற்ற ஜடங்களும் எமது சமூகத்தின் விடியலுக்கு பெறும் அச்சுறுத்தல்களே என்பதை நாம் புரிந்து கொண்டு முதலில் இவர்களை சீர்திருத்தம் செய்ய புறப்படுவது காலத்தின் தேவையாகும்.

Leave a comment