பேர்லின்: ஜேர்மனியில் அகதிக்குழந்தைகளுக்கு பாடம் நடத்துவதற்காக உலக அளவில் 8,500 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். போர் மற்றும் வறுமை காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்த 196,000 அகதிக் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 8,264 சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் உலக அளவில் 8,500 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வருடம் ஜேர்மனிக்கு குடிபெயர்ந்த குழந்தைகள் 325,000 பேர், பள்ளியில் படிக்கும் வயதுடையோர். இது இரண்டாம் உலகப்போரை விட மிக மோசமானதாகும்.

Leave a comment