- எம்.எச்.எம். அன்வர்
காத்தான்குடி: SRD நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஆங்கிலம் பேச ஒரு சந்தர்ப்பத்தினை மாணவர்களுக்கு ஏற்படுத்தி சரளமாக கூச்சமின்றி ஆங்கிலம் பேசுவதற்கான ஒரு சூழலை ஏற்படுத்தும்முகமாக நேற்றய தினம் 27.12.2015 வைபவ ரீதியாக காத்தான்குடி ஜூமைறா பெலசில் English communication club எனும் பெயரில் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
SRD நிறுவனத்தின் செயலாளர் டொக்டர் எம் டி எம் மாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக இலங்கைக்கான துருக்கித் தூதுவர் பி எம் அம்ஸா SLFS கலந்து கொண்டு ஆரம்பித்ததுடன், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் எம் எஸ் எம் ஜாபிர், தனியார் நிறுவனத்தின் திட்டமிடல் உத்தியோகத்தர் கே எம் நவாஸ், சட்டத்தரணி ஏ உவைஸ், டொக்டர் ஏ எல் எம் சியாம், பொறியியலாளர் எம் எம் தௌபீக் உட்பட மேலும் உத்தியோகத்தர்கள் ,பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்கள் ஆங்கிலக்கல்வியால் நாம் அடைந்த நன்மைகள் தங்கள் வாழ்க்கையில் ஆங்கிலக்கல்வி பயிலும்போது ஏற்பட்ட தடைகளும் சுவாரஸ்யமான சம்பவங்களையும் ஆங்கிலத்தில் தெரிவித்ததுடன் ஆங்கிலக்கல்வியை கட்டாயம் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்தினர்.

SRD அமைப்பின் சமூக சேவை வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசவும் துணிவுடன் அவற்றை கற்கவும் பயிற்சி வகுப்புக்கள் எதிர்வரும் காலங்களில் நடாத்தப்படவுள்ளதாக டொக்டர் எம் டி எம் மாஹிர் தெரிவித்தார்.

Leave a comment