கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் உலகின் பல பகுதிகளிலும் வழமைக்கு மாறாக அதிகரித்த வெப்பநிலை

londonலண்டன்: இம்முறை கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் உலகின் பல பகுதிகளிலும் வழமைக்கு மாறாக அதிகரித்த வெப்பநிலை உணரப்படுகின்றது. அமெரிக்கா தொடங்கி ரஷ்யா வரை மக்கள் கோட், தொப்பி போன்ற குளிர் ஆடைகளை தவிர்த்து,பெரும்பாலும் கோடைகாலத்தில் அணியக்கூடிய டி-சர்ட் போன்ற ஆடைகளை அணிந்துகொள்வதை காணமுடிகின்றது.

எல் நின்யோ எனப்படுகின்ற பசிபிக் பெருங்கடலில் ஏற்படுகின்ற வெப்பநிலை அதிகரிப்பு தான் இதற்கு காரணம் என்று காலநிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த வழமைக்கு மாறான வெப்பநிலை அதிகரிப்பு அமெரிக்காவின் மத்திய பகுதியில் புயல்கள் தீவிரமடைய காரணமாகியுள்ளது. பிரிட்டனிலும் பராகுவேயிலும் வௌ்ளப் பெருக்கு ஏற்படவும் காரணமாகியுள்ளது.

london

Published by

Leave a comment