கொழும்பு: முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜனவரி மாதம் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக ராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், மகிந்த ராஜபக்ச மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய நட்புறவு காணப்பட்டதுடன் அதன் ஊடாக சீனா, இலங்கையில பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்தது.சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்க் 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வருகை தந்திருந்ததுடன் சீனாவின் மிகப் பெரிய அபிவிருத்தித்திட்டமாக கொழும்பு துறைமுக நகரின் நிர்மாணிப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
Leave a comment