ஹிருணிக்காவின் ஆதரவாளர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

Hirunika-300x225கொழும்பு: ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவின் பாதுகாப்பு வாகனம் ஒன்றை பயன்படுத்தி நபர் ஒருவரை கடத்திச் சென்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அவரது 6 ஆதரவாளர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலீசார் அவர்களை அடையாள அணிவகுப்பொன்றில் நிறுத்துவதற்கு அனுமதி தருமாறு நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதி சந்தேகநபர்களை எதிர்வரும் 04-ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அன்றைய தினம் அவர்களை அடையாள அணிவகுப்பொன்றில் நிறுத்துமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிபதிகளுக்கு உத்தரவிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவின் டிஃபெண்டர் வாகனம் ஒன்றை பயன்படுத்தி சந்தேகநபர்கள் கொழும்பு தெமட்டகொடை பகுதியில் ஒருவரை கடத்தியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்தனர். இதனிடையே, இந்த சம்பவத்துடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறியுள்ள ஹிருணிக்கா பிரேமச்சந்திர தனது ஆதரவாளர்களின் நடவடிக்கையை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே தான் அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Published by

Leave a comment