சென்னை: தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள 25,912 கோடி ரூபாய் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் செவ்வாயன்று எழுதியிருக்கும் கடிதத்தில், தமிழகத்தில் பெய்த மழை வெள்ளத்தின் காரணமாக, மாநிலத்தின் உள்கட்டமைப்பிற்குக் கடுமையான சேதம் ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஏற்கனவே தமிழகத்தை மத்தியக் குழு பார்வையிட்டிருந்தாலும், அந்தக் குழுவினர் பார்வையிட்டுச் சென்ற பிறகு தான் நான்காவது முறையாகப் பெரும் மழை பெய்ததாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் மழை வெள்ள பாதிப்புகளை தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் சீரமைக்க ஒட்டுமொத்தமாக 25,912.45 கோடி ரூபாய் தேவை என முதல்வர் தன் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
Leave a comment