- MJ
லண்டன்: சிரியாவின் மீது அமெரிக்காவின் தலைமையில் அதனது நட்பு ஐரோப்பிய நாடுகள் இணைந்து குண்டுகளை வீசிவருகின்றன. இதுவரையிலும் எண்ண முடியாத அளவுக்கு சிரியாவின் பொதுமக்கள் கொல்லப்பட்டு மண்ணில் வீழ்த்தப்படுகின்றனர். சிறுவர்களினதும், பெண்களினதும் உடல்கள் சிதைந்து உதிரத்தோடு சங்கமித்திருக்கின்றன.
பரிஸ் நகரில் கடந்த நவம்பரில் இடம்பெற்ற துப்பாக்கி மற்றும் குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இருந்தனர் என்பதைக் கருத்திற்கொண்டு, சிரியாவை உலகச் சண்டியன் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தாக்குகின்றன.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகளைத் தவிர்த்து, பொதுமக்கள் நிலைகள் மீது இக்கூட்டுப்படையினர் குண்டுகளைப் பொழிகின்றனர்.
ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவில் மாத்திரம் நிலைகொண்டிருக்கவில்லை. இத்தீவிரவாதிகள் ஈராக்கிலும் நிலைகொண்டிருக்கும்போது, சிரியாவை மட்டுமே தாக்கும் அமெரிக்காவின் நோக்கம் என்ன என்பது தற்பொழுது உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

“சிரியாவுக்கு குண்டுகளைப் போடாதே” என பிரித்தானிய வெள்ளையர்களே தற்பொழுது குரல் கொடுத்து வருகின்றனர். பிரித்தானிய பாராளுமன்றத்திலும் சிரியாவின் விடயங்கள் பல சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளன.
பிரித்தானியாவின் முஸ்லிம்களின் நிலை என்ன?
சிரியாவில் குண்டுமழைகள் பொழிகின்றன. இலட்சக்கணக்கான மக்கள் இதுவரை கணக்கு வழக்கின்றி குண்டுகளால் அழிக்கப்பட்டிருக்கின்றனர்.
இதுவரைக்கும் சிரியாவுக்காக பிரித்தானிய முஸ்லிம்கள் குரல் கொடுக்க மனமின்றி தங்களது வேலைகளைக் கவனித்துக்கொண்டிருக்கின்றனர்.
டெனிம் சீன்ஸ், டைட்ஸ், குட்டைபாவாடை, ரீசேர்ட் அணிந்து மார்பங்கள் தெரிய, தலையை மாத்திரம் சுற்றிக் கட்டும், இஸ்லாமிய ஆடையை உலகிற்கு அடையாளப்படுத்திய “பெருமை” இந்த அரபு நாட்டு முஸ்லிம்களையே சாரும்.
உல்லாசத்துக்காகவரும் அரபிகள் லண்டன் மாநகரின் “பேக்கர்- Baker” வீதியிலும், ஒக்ஸ்போர்ட் வீதியிலும் மற்றும் “பிரேட்போர்ட்” நகரிலும் தங்கள் “அழகான” இரவுகளை அனுபவித்துக் கழித்துவிட்டு மீண்டும் பயணிக்கின்றனர்.

“மஸ்ரி”காரன் (எகிப்தியர்கள்) சீஸாவை உறிஞ்சிக்கொண்டு, அதிகாலைவரைக்கும் தொலைக்காட்சியை இரசித்துகொண்டு, மதிமயங்கி பகல்முழுக்க மடிகிறான். உலகிலேயே மஸ்ரிக்காரன் தொலைக்காட்சி பார்ப்பதுபோன்று வேறு எவரும் இருக்கமாட்டார்கள்.
பலஸ்தீன், ஈராக், துருக்கி இந்நாட்டவர்கள் தங்களது உணவகங்களில் சீஸா, மதுரகங்கள், நங்கைகள், உணவுகள் விடங்களை எவ்வாறு மென்மேலும் அதிகரித்துக்கொண்டு செல்ல முடியும் என யோசிக்கின்றனர்.
இவர்களுக்கும் மத்தியில் விரல்விட்டு எண்ணக்கூடிய இதயங்கள் சிரியா மக்களுக்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றனர் என்பதையும் மறந்துவிட முடியாது.
அரபு வலயத்தின் இயலாமை:
இஸ்ரேல், பலஸ்தீன் மீது தாக்குதல் நடாத்தும்போது எவ்வாறு அரபுநாடுகள் கண்டுகொள்ளாமல் இருந்தனவோ, அதே நிலைமைதான் சிரியாவின் விடயத்திலும் அரபு நாடுகள் இருக்கின்றன.
அமெரிக்காவை எதிர்த்து குரல் எழுப்பாத அரபு வலயத்தின் பலவீனம், இன்னும் பல உயிர்கள் சிரியாவில் மடிய இருப்பதை எதிர்வு கூறுகிறது.
ஆங்கில ஊடகங்கள்:
பரிஸ் நகர் தாக்குதலின் பின்னர் ஒருமித்து துவேசத்தைத் தூண்டிய அனைத்து ஆங்கில மீடியாக்களும், ஒருமித்து தற்பொழுது துவேசத்தை நிறுத்தி இருக்கின்றன.
பத்திரிகைச் செய்திகளைப் படித்து சம்பங்களை நம்பும் அதிகமான வெள்ளையர்களுக்கு சிரியாவின் உண்மை விடயத்தை எடுத்துக்கூற அச்சுப்பத்திரிகை பிரித்தானியாவில் இல்லை.
இத்தகைய மீடியாக்களின் பின்னணியில் இருப்பவர்கள் அனைவருமே அமெரிக்காவின் ஏஜன்டுகள் என்பது மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
ஐரோப்பிய யூனியனைவிட்டு தான் விலகப்போவதாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் அண்மைக்காலமாக கூறிவந்த நிலையிலேயே பரிஸ் தாக்குதல் நடாத்தப்பட்டது. இதன் பின்னர் இந்தக் கதையை இன்று கடலில் தேடவேண்டிய நிலை அங்கு ஏற்பட்டிருக்கிறது.
பரிஸ் குண்டு வெடிப்பு மற்றும் தாக்குதல்களின் மர்மங்கள் விரைவில் துலக்கப்படும்.
இறுதியாக சிரியாவின் விடயத்தில் குறிப்பாக அனேகமான அரபி முஸ்லிம்களிடத்தில் எந்த ஆர்வத்தையும் அங்கு காணமுடியவில்லை!MJ
Leave a comment