கொழும்பு: இலங்கைக்கு ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளமையினால், நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், விசேட குழுவொன்று நியமிக்கப்படுவதன் ஊடாக விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் வலுப் பெற்று, சர்வதேசத்தின் பல பகுதிகளிலும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்ற நிலையிலேயே இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Leave a comment