காத்தான்குடி: கடந்த சில நாட்களுக்கு முன்னால் மீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஒரு கலாச்சார சீர்கேடு தொடர்பாக தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரகர் M. ஸஹ்றான் மௌலவியின் விமர்சனம் உலக மக்களைத் திரும்பச்செய்தது. மேலும் அக்கலாச்சார சீரழிவை அரங்கேற்றிவைத்த பாடசாலையின் அதிபரும் சம்மேளனத்தின் உறுப்பினருமான MCMA. சத்தார் ஆசிரியருக்கு கடுமையான கண்டனமும் விடுக்கப்பட்டது.
ஆனால் சத்தார் ஆசிரியரை அழைத்து விசாரணை நடாத்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டிய சம்மேளனம், சத்தார் ஆசிரியருடைய அனுதாபிகளாக உருமாறி தற்போது ஸஹ்றான் மௌலவியை அழைத்து விசாரணை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சம்மேளனம் தொடர்பாக இணையதளங்களிலும் சமூகவலைத்தளங்களிலும் விமர்சனங்களை பதிவிடுபவர்கள் மீதும் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அறியக்கிடைக்கிறது.
இவ்வாறு தங்களுடைய கடமைகளிலும் பொறுப்புக்களிலும் பாராமுகமாக இருந்து சமுதாய சீர்கேடுகள் அனைத்திற்கும் அங்கீகாரம் வழங்கிவருகின்ற சம்மேளனம் இஸ்லாமிய சமூகத்தின் மார்க்க ரீதியான விடயங்களை உடனுக்குடன் தெளிவுபடுத்தும் உலமாக்களையும் ஊடகவியலாளர்களையும் அடக்கியொடுக்க
எத்தனிப்பதன் மூலம் இந்த சமூகத்திற்கு எதனைக்கூறி வைக்க முயற்சிக்கிறது?
சம்மேளன உருப்பினர் ஒருவர் தனது முகநூலில் பின்வருமாரு பதிவிட்டுள்ளார்,
“சுபைர் c.c உப தலைவர்”
சுபைர் c.c சம்மேளத்தின் தற்போது உப தலைவரா?
சம்மேளன யாப்புப்படி தலைவராக இருந்த ஒருவர் உப தலைவராக இருக்க முடியுமா?
சம்மேளன கூட்டத்தை தலைமை தாங்க சுபைர் c.cக்கு அனுமதி உண்டா ?
இது முழுக்க முழுக்க சம்மேள யாப்புக்கு முரனான நடவிடிக்கை என அறியக்கிடைக்கிரது?
இதுதான் தலைமைத்துவத்தின் லட்சணமா?
சமூகத்தின் மீதான பொறுப்புக்களை சுயாதீனமாக நிறைவேற்றுகின்ற அழகு இதுதானா?
மக்களே சிந்திக்க வேண்டும்!
- எம். பர்ஸாத்
Leave a comment