ரி20 உலகக் கிண்ணம்: முழுப் பலத்துடன் களமிறங்குவோம்

cricketகொழும்பு: எதிர்வரும் 2016ம் ஆண்டு இந்தியாவில் நடைப்பெறவிருக்கும் T20 உலகக் கிண்ணத்திற்கு நாம் தயாராகிக் கொண்டிருக்கிறோம். எந்தெந்த பயிற்சிகள் தேவையோ அத்தனையையும் பெற்று முழு பலத்துடன் களமிறங்கவுள்ளோம் என இலங்கை 20க்கு 20 அணித் தலைவர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.20க்கு20 உலகக் கிண்ண இலங்கை அணிக்கு அனுசரணை வழங்கும் நிகழ்வில் உரையாற்று கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது அவர் உரையாற்றுகையில்,

நடப்பு சம்பியன் என்ற நிலையில் களமிறங்குவதால் அழுத்தம் இருக்கிறதா என்று கேட்கிறார் கள். அப்படியெல்லாம் இல்லை. வெற்றி என்பது ஒரு திருப்புமுனைதான். தொடர் வெற்றியே எமது இலக்கு என தெரிவித்தார்.

இலங்கையின் இருபதுக்கு 20 ஆண்கள் கிரிக்கெட் அணிக்கும், பெண்கள் கிரிக்கெட் அணிக்குமான அனுசரணையை இந்திய நிறுவனமான கொன்ஃபிடன்ட் குரூப் நிறுவனம் வழங்குகிறது.

cricket

2014ஆம் ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக்கிண்ணத்தின்போது மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கும் இந்நிறுவனம் அனுசரணை வழங்கயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment