கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. சற்று முன்னர், பாரிய மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகினார். சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு (ITN) வழங்க வேண்டிய விளம்பரக் கட்டண நிலுவை தொடர்பாகவே விசாரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதித் தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்சி ஊடாக ஒளிபரப்பப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பான பிரசார விளம்பரங்களுக்கான 115 மில்லியன் ரூபாவை அறவிடத் தவறியமை, ஜனாதிபதி வேட்பாளராகியிருந்த மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து 80 மில்லியன் ரூபாவை பிரசார விளம்பரத்துக்காக அறிவிட்டு பிரசாரங்களை முன்னெடுக்காமல் குறித்த பணத்தை மீள அவரிடம் கையளித்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
Leave a comment