- ஹாசிப் யாஸீன்
கொழும்பு: இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் நேத்ரா தொலைக்காட்சியில் இன்று இரவு (20) வெளிக்கிழமை 10 மணிக்கு இடம்பெறவுள்ள ‘வெளிச்சம்’ நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பங்கேற்கவுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் தற்கால அரசியல் நடப்பு விவகாரங்கள், அரசியல் யாப்பு திருத்தத்தினால் முஸ்லிம்களுக்கு ஏற்படக்கூடிய சவால்கள, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்பினால் சிறுபான்மையினருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள், இன்றைய நல்லாட்சி அரசாங்கமும், முஸ்லிம்களும் என பல்வேறு அரசியல் விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்படவுள்ளது.

Leave a comment