வரவு செலவுத் திட்டம் -2016 (முழு விபரம்)

ravi-karunanayake06.24 PM- வரவு செலவுத் திட்டம் நிறைவு

– அனைவரது நலனை கருத்திற்கொண்டு இந்த வரவு செலவுத்தை நான் முன் மொழிந்துள்ளேன் – நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க.

 – 2018 இல் எஸ்பெஸ்டர் கூரைகளின்றிய நாடு.

 – ஓடு உற்பத்தியை ஊக்குவிக்க, அரை வரிச் சலுகை.

 – நீர் போக்குவரத்து அபிவிருத்திக்காக ரூபா 250 மில்லியன்.

 – சட்டவிரோத மதுபானத்தை கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்கள்.

 – வரி சலுகைகள் முன்மொழிவுகள்…

 – சூதாட்ட வரி ருபா 400 மில்லியன் ஆக அதிகரிப்பு

 – எளிமைப்படுத்தப்பட்ட வரி அமைப்பு: பங்கு பரிவர்த்தனை வரி, கட்டுமான தொழில் உறுதி மொழிகளை வரி, ஆடம்பர கார் வரி, சுற்றுலா வரி, நிறுவன வருவாயில் வரி எளிமையாக்கப்படுகின்றது.

 – பாராளுமன்ற உறுப்பினர்களின் திறமை வளர்ச்சிக்காக ரூபா 50 மில்லியன்.

 – ஒரு கிலோ நெத்தலி கருவாட்டின் உச்சபட்ட விலையாக ரூ 418 முன்மொழிவு

 – 425 கிராம் டின் மீன் ரூபா 125 வரை விலை குறைப்பு.

 – மண்ணெண்ணெய் ரூபா 10 இனால் விலை குறைப்பு

06.02 PM – 12.5KG சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபா 150 இனால் குறைப்பு.

06.02 PM – கடலை ஒரு கிலோ ரூபா 160

06.01 PM – பருப்பு ஒரு கிலோ ரூபா 169

06.01 PM – குழந்தைகளின் பால் மா ரூபா 100 இனால் விலை குறைப்பு.

06.01 PM – நெத்தலி கருவாடு ரூபா 410

06.00 PM – உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்திற்கு 25 வரி கழிவு

05.57 PM – வெளிநாட்டு வேலைவாய்ப்பு: பயிற்சி பெற்ற மற்றும் பயிற்சி பெறாத தொழிலாளர்களுக்கு சம்பளம் $ 300 இனை வழங்க வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு ஆலோசனை

– களனிவெலி ரயில் பாதையை நவீனமயமாக்க ரூபா 1,500 மில்லியன் ஒதுக்கப்படும்

 ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தை ஒன்றிணைக்க யோசனை.

 2016 ஜனவரி முதலாம் திகதி முதல் அரச வேலைகளில் இணைவோருக்கு புதிய ஓய்வூதியத் திட்டம்.

விமானம் மூலம் கொண்டு வரும் பொருட்களை கையாளும் மத்திய நிலையமாக மத்தளை விமான நிலையம் செயல்ப்படுத்தப்படும்.

 – தேசிய மருத்துவ துறையை மேம்படுத்தல் மற்றும் அது தொடர்பான சலுகை, நிதி வழங்குதல்.

 – சிவில் விமான போக்குவரத்து சேவை : திகண, பதுளை மற்றும் புத்தளம் பிரதேசங்களில் உள்நாட்டு விமான நிலையங்கள் அமைக்கப்படும்

 – இனி ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையில் அரச தலையீடு கிடையாது.

 – மூன்று உள்நாட்டு விமானநிலையங்கள்: திகண, புத்தளம், பதுளையில் நிர்மாணம்.

 – அரசு கொடுப்பனவுகளை செலுத்த புதிய தனிக்கணக்கு.

 – அதிவேக நெடுஞ்சாலை முகாமைக்கு சிறப்பு பிரிவு.

 – நாட்டில் பொலிஸ் நிலையங்கள் 600 ஆக உயர்த்தல்.

 – பல்கலைக்கழக அனுமதியின் போது விளையாட்டு திறமைகள் கருத்திற்கொள்ளப்படும்.

 – அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு சிறப்பு பிரிவு.

 – நாடுபூராகவும் WiFi வலயங்கள் அமைக்க ரூபா 3,000 மில்லியன்

 – இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு ரூபா 500 மில்லியன் ஒதுக்கீடு.

 – குருநாகல், அநுராதபுரம் வைத்தியசாலைகளை புனரமைக்க ரூபா 3 ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு.

– காவற்துறையின் சம்பள முரண்பாடுகள் 2 ஆண்டுகளில் தீர்க்கப்படும்.

 – பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை. தற்போது நாடுபூராகவும் உள்ள 428 பொலிஸ் நிலையங்கள் 600 ஆக அதிகரிக்கப்படும்.

 – நல்லூர், மாத்தறை, கண்டி ஆகிய இடங்களில் புற்றுநோய் வைத்தியசாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 – இலவசக் கல்வியில் மாற்றமில்லை.

 – பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலகு கொடுப்பனவு முறையில் மடிக் கணனி மற்றும் இலவச WiFi.

 – மகாபொல பல்கலைக்கழகம் மாலபவில் அமைக்கப்படும்.

 – கிளிநொச்சியில் விஞ்ஞானப் பீடமும் வவுனியாவில் விவசாயப் பீடமும் அமைக்கப்படும்.

 – 2018 இற்குள் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுதி வசதி.

 – மாணவர்களின் சீருடைக்கு வர்த்தக பெறுமதியுடைய நிதிச்சீட்டுக்கள்.

– உயர்தரப் பரீட்சைக்கு பின்னர் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி.

 – அனைத்து பாடசாலைகளுக்கும் சிறந்த மலசலக்கூட வசதி.

 – கல்வித்துறைக்கு மொத்தமாக ரூபா 90 பில்லியன் நிதி ஒதுக்கீடு. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதத்தில் 5.41%.

 – ஆசிரியர்களுக்கு விடுதி செலவுக்கு ரூபா 2 ஆயிரம் வழங்கப்படும்.

 – கல்வி தனியார் மயப்படுத்தப்படமாட்டாது, அரசாங்கம் உறுதியளிக்கின்றது.

– பல்கலைகழக மாணவர்களுக்கு, பட்டப்படிபுக்கு பின்னர் கட்டாய தொழிற்பயிற்சி.

– ‘மஹபொல பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் புதிய பல்கலைக்கழகம்.

 – விஞ்ஞான, கணித பீடங்கள் இல்லாத பாடசாலைகளில் விஞ்ஞான கணித பீடங்களை அமைக்க 450 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

 – அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளக்கணக்கு.

 – அச்சிடப்பட்ட புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகளுக்கு வரிச்சலுகை.

 – சுயாதீன பணிப்பாளர் சபையின் கீழ் முறிகள் தொடர்பிலான நிறுவனம் ஆரம்பிக்கப்படும்.

 – அனைத்துப் பாடசாலைகளுக்கும் 2016 முடிவிற்குள் மின்சார மற்றும் மலசலக்கூட வசதி. இதற்கென 4000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும்.

 – அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள வங்கிக் கணக்கு.

 – புதிதாக இணையும் ஆசிரியர்களுக்கு முதல் 5 வருடங்களுக்குள் 2 வருட கட்டாயப் பயிற்சி.

ravi-karunanayake

 – ஆரம்ப பாடசாலை அபிவிருத்திக்கு ரூபா 10,000 மில்லியன் ஒதுக்கீடு.

 – தனியார் ஊழியர்களின் வேலை நாட்களை ஐந்து நாட்களாக குறைக்க தீர்மானம்.

 – முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள்களுக்கான மதிப்பீட்டுக் கட்டணம் ரூபா 2,500 ஆக முன்மொழிவு.

– தனியார் ஊழியர்களுக்கு ரூபா 2,500 அதிகரிக்க பரிந்துரை.

 – ஆடை, காலணி மற்றும் மின்சார உபகரணங்கள் உள்ளிட்ட 15 பொருட்களுக்கு இறக்குமதி வரி நீக்கம்.

 – காலி நகரின் அபிவிருத்திக்காக ரூபா 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

 – அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள வங்கிக் கணக்கு தொழில் வழங்குனர்களால் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

 – உள்நாட்டு வங்கிகள் வௌிநாடுகளில் கிளைகளை ஆரம்பிக்கும் போது நிவாரணம் வழங்கப்படும்.

 – பாடசாலையில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பள்ளி குழந்தைகளுக்கும் ரூபா 250 சேமிப்பு கணக்கை ஆரம்பிக்க வங்கிகளிடம் கோரிக்கை.

 – 2016 ஜூன் முதலாம் திகதி முதல் அனைத்து வங்கிகளும் மொத்த கடன் வழங்கும் தொகையில் 10% கடனுதவியை சிறு தொழில் ஆரம்பிப்பவர்களுக்கும் 5% கடன் உதவியை இளைஞர் மற்றும் பெண்களுக்கும் வழங்க வேண்டும்

 – திவிநெகும நிதியத்தை தேசிய சேமிப்பு வங்கியுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

04.57 PM – வெளிநாட்டில் திறக்கப்படும் உள்நாட்டு வங்கி கிளைகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

04.54 PM – தெற்காசிய நாடுகள் இலங்கையில் முதலீடுகளை செய்து நாட்டை வணிக மையமாக மாற்ற அழைப்பு.

 – கொழும்பு சர்வதேச நிதி கேந்திர நிலையத்தை டீ.ஆர். விஜேவர்தன மாவத்தையில் ஸ்தாபிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

– சுற்றுலாத்துறை வளர்ச்சிக்காக பரவலான விளம்பரம் மேற்கொள்ளப்படும்

 – நாட்டிலுள்ள அனைத்து விடுதிகளையும் அபிவிருத்தி சபையின் கீழ் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும்.

 – கிரேன்கள் மற்றும் கொங்ரீட் இயந்திரங்களின் இறக்குமதி வரி நீக்கம்.

 – சுற்றுலாத்துறை வளர்ச்சிக்காக இளைஞர்களுக்கு பயிற்சி

 – நிதி ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு பல வங்கிகள் ஒன்றிணைக்கப்படவுள்ளன.

 – வீடுகள் நிர்மாணிப்பதற்கு 7 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க திட்டம்.

 – சொகுசு வரி முற்றாக நீக்கப்படும்.

 – கட்டடத்துறையில் பயிற்சி பெறும் ஊழியர்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா கொடுப்பனவு

 – அரச பாவனையற்ற காணிகளில் வீடுகள் நிர்மாணிக்க அனுமதி வழங்கப்படும்.
04.40 PM – இலத்திரனியல் சாதனங்கள் உட்பட இறக்குமதி செய்யப்படும் 15 பொருட்கள் மீதான வரி குறைக்கப்படும்

 – சுற்றுலா துறை வளர்ச்சிக்காக விரிவான பிரசாரத்தை வழங்க நடவடிக்கை.

 – சூரிய சக்தியை பயன்படுத்துவற்கு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை.

 – பாரம்தூக்கி மற்றும் கொங்கிறீற் இயந்திரங்களுக்கான இறக்குமதி வரி நீக்கப்படும்

 – காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ், 10 வருடங்களாக வசிப்போருக்கு, ஸ்வர்ண பூமி, ஜய பூமி திட்டத்தின் மூலம் மற்றும் காணிகளின் காணி உரித்துரிமைக்கான உரிய சட்டம் அமைக்கப்படும்.

 – வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து காணிகளையும் வரிகளிலிருந்து விடுவிக்க முன்மொழிவு.

 – கிராமிய வீட்டுத் திட்டங்களை ஆரம்பிக்கும் யோசனை.

 – 5 ஆண்டுகளில் ஒரு இலட்சம் வீடுகள் கட்டப்படும்.

 – பயன்படுத்தப்படாத அரசு நிலங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்டும்

 – இலங்கையின் அனைத்து வங்கியின் மூலமும் இலத்திரனியல் முறையிலான கொடுக்கல் வாங்கல் வசதி.

 – ஜனவரி முதல் இலத்திரனியல் அடையாள அட்டை (Dgital NIC) அறிமுகப்படுத்த நடவடிக்கை.

 – தங்க கைத்தொழில் : தங்கம் மீது விதிக்கப்பட்டுள்ள வரி ஏற்புடையதல்ல. அதன்படி, இறக்குமதி வரிக்கு மேலதிகமாக, தங்க இறக்குமதிக்கான 50 அனுமதிப்பத்திரத்தை இலங்கை மத்திய வங்கியின் மூலம் வழங்க முன்மொழிகிறேன். இந்த அனுமதிப்பத்திரம் இன்றி எந்தவொரு தங்க வர்த்தகத்திற்கும் அனுமதி இல்லை.

 – அனைத்து அரசாங்க கட்டடங்களிலும் தொழில்நுட்பத்தை இணைக்க பரிந்துரை.

– வவுனியாவில் புதிய பொருளாதார வலயம் உருவாக்கப்படும்.

 – அலங்கார மீன் கைத்தொழில்: அழகு மீன் கைத்தொழிலை ஆரம்பிப்போருக்கு கடன் வழங்க முன்மொழிவு

 – நிகர நிதி நிறுவனங்களின் ஒழுங்குமுறைப்படுத்த அதிகாரசபை: அனைத்து நிதி நிறுவனங்களின் அதிகாரசபையில் வருடாந்த கட்டணம் செலுத்தி பதிவு செய்யப்படு வேண்டும்.

 – மாணிக்கம் மற்றும் ஆபரண கைத்தொழிலை விருத்தி செய்ய, பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சி பெறுவோருக்கு நவீன பயிற்சிநெறிகள் வழங்கப்பம்.

 – சிறிய குளங்கள், கால்வாய்களை புனரமைக்க ரூபா 2,000 மில்லியன்.

 – தெங்கு கைத்தொழில்: தெங்கு உற்பத்தி திட்டத்திற்கு ரூபா 250 மில்லியன் ஒதுக்க முன்மொழிவு.

 – விவசாயம் தொழின் முயற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும்.

 – பாக்கு சேகரிக்கும் வலயங்கள் உருவாக்க முன்மொழிவு.
 

– தேயிலை உற்பத்தியை உயர்த்த தேயிலை இறக்குமதி விதிகள் தளர்த்தப்படும்.

– பெருந்தோட்ட கைத்தொழிலை அபிவிருத்தி செய்ய பிரதேச அளவிலான தோட்ட நிறுவனங்களை பங்கு சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்

 – தேசிய மீன் உற்பத்தியை அதிகரிக்க துறைமுகங்களுக்கு நவீன தொழில்நுட்பத்தை இணைக்க முன்மொழிவு

– மீனவர்களுக்கு ரூபா ஒரு மில்லியன் காப்பீட்டுத் திட்டம்

 – தேசிய பால் உற்பத்தியை உயர்த்தும் பொருட்டு 400g உள்நாட்டு பால்மாவின் விலையை ரூபா 320 இலிருந்து ரூபா 295 ஆக குறைப்பதற்கு முன்மொழிவு

 – பழம் பதப்படுத்தி தகரத்தில் அடைக்கும் தொழிலை மேம்படுத்த 50 % வட்டி கொண்ட கடன்

 – சிறு விவசாயிகளுக்கு மாத்திரமே, உர மானியம் வழங்கப்படும்.

 சம்பா கிலோ ஒன்றுக்கு ரூபா. 41 கீரி சம்பா ரூபா 50

 – நெல்லுக்கு உத்தரவாத விலை

 – சிறிய மற்றும் மத்திய தர வணிக முயற்சியாளர்களுக்கான மூலதனத் திட்டத்திற்கு காப்பீட்டு திட்டம், ஊழியர் சேமலாப நிதிய திட்டம், வெளிநாட்டு முதலீடுகள் மூலம் தொழிலை நடாத்திச் செல்வதற்கான மூலதனம் வழங்கப்படும்.

– இறக்குமதி செய்யப்படும் விவசாய இயந்திரங்களுக்கு வரி விலக்கு.

 புதிய விவசாயக் கொள்கை

 – சிறிய மற்றும் நடுத்தர வியாபார முயற்சியாளர்களுக்கு கடன் வழங்க ரூபா 500 மில்லியன் ஒதுக்கப்படும்

 – சிறிய மற்றும் நடுத்தர வியாபார முயற்சியாளர்களுக்கு கடன் திட்டம்

 – தனியார் ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம்.

 – போக்குவரத்து நெரசல் காணப்படும் நகரங்களில் உயர் தரமான போக்குவரத்து முறைமை

 – சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரிபொருள் பாவனைக்கு நடவடிக்கை.

 – பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு முன்னுரிமை.

– வீதி புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

 – டெங்கு, சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோய் ஆகியவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

 – மஹிந்த ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் நாம் நல்ல பாடத்தை கற்று கொண்டோம்.

 – எதிர்கால வரவு செலவுத் திட்டத்தை தற்போது முன்வைக்கின்றேன்.

 – புதிதாக அரசாங்க உத்தியோகத்தில் இணைந்து கொள்பவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்.

 – 2014 ஆம் ஆண்டில் தேசிய உற்பத்தி நூற்றுக்கு 10 வீதமாக குறைந்துள்ளது.

 – கடந்த ஆட்சியில் வீதி அபிவிருத்திக்காக உலக நாடுகளிடம் கூடுதலாக கடன் பெறப்பட்டுள்ளது.

 – கடந்த கால ஆட்சியில் நாட்டின் கடன் மாத்திரமே உயர்ந்துகொண்டிருந்தது.

 – 2004 தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நாட்டு மக்களின் முக்கிய தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை.

 – கடந்த பத்து மாதங்களில் இலங்கையில் சமூக, பொருளாதார, அரசியலில் பாரிய மாற்றங்கள்.

 – எதிர்காலத்தில் பலமான பொருளாதாரம் அவசியமாகும்.

 – பத்து இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

02.03 PM – 2016 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை – நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிப்பு.

02.00 PM – சபாநாயகர் கருஜயசூரிய அவைக்கு தலைமை வகிக்கிறார்

Published by

Leave a comment