இலங்கைப் பெண்ணொருவர் சவுதியில் கல்லெறிந்து கொல்லப்படுகிறார்

judgementறியாத்: இலங்கை பணிப்பெண் ஒருவரை கல்லெறிந்து கொலை செய்ய சவூதி அரேபிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு, மருதானைப் பிரதேசத்தைச் சேர்ந்த திருமணம் முடித்த பெண் ஒருவருக்கே விபச்சாரக் குற்றம் சாட்டில் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சவூதியில் பணி புரியும் திருமணம் முடிக்காத மற்றுமொரு இலங்கை ஆணுடன் இவர் தகாத உறவு வைத்திருந்துள்ளதாக உறுதிப்படுத்ததை அடுத்தே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருமணம் முடிக்காதவர் என்பதால் அந்நாட்டு சட்டத்திற்கு அமைய குறித்த இளைஞருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 100 கசை அடிகள் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. தனக்கு எதிரான குற்றச்சாட்டை குறித்த பெண் நீதிமன்றத்தில் ஏற்றுக் கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை குறைக்குமாறு வெளிவிவகார அமைச்சர் தலதா அதுகொரல சவூதி அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment