சவுதியில் இரு பொலிசார் சுட்டுக்கொலை

saudi policeறியாத்: சவுதி அரேபியாவில் இன்று அதிகாலை பொலிஸ் வாகனம் ஒன்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானபோது அதில் இருந்த இரண்டு பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்டனர். சவுதி அரேபியாவின் கிழக்குப் பகுதி மாகாணமான, அல் காதிஃபில் நடந்த இந்தத் தாக்குதலை யார் நடத்தியது என்பது இன்னும் தெளிவாகவில்லை.

ஆனால் இப்பகுதியில், பாதுகாப்புப் படையினருக்கும் சிறுபான்மை ஷியா பிரிவினருக்கும் இடையே நீண்டகாலமாக பதற்றநிலை காணப்பட்டு வந்தது.

saudi police

ஷியா பிரிவினர் தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாகக் குற்றம்சாட்டிவருகின்றனர்.இந்தப் பகுதியில் 2011ல் நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களோடு தொடர்புடைய சந்தேக நபர்களைப் பொலிசார் தற்போது தேடிவருகின்றனர்.

Published by

Leave a comment