குண்டுப்புரளி காரணமாக இரு எயார் ஃபிரான்ஸ் விமானங்கள் அவசரத் தரையிறக்கம்!

air france plane– MJ

வோஷிங்டன்: அமெரிக்காவின் வோஷிங்டன் டலஸ் மற்றும் லொஸ் ஏன்ஜல்ஸ் ஆகிய விமான நிலையங்களிலிருந்து இன்று பிரான்ஸ் தலைநகர் பரிஸை நோக்கி பறந்துகொண்டிருந்த 055 மற்றும் 065 ஆகிய இரு விமானங்களும் அநாமோதய தொலைபேசி அழைப்பையடுத்து அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக லொஸ் ஏன்ஜல்ஸ் விமானசேவை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

262 பயணிகளுடன் டலஸ் நகரில் இருந்து புறப்பட்ட விமானம், கனடாவின் ஹலிஃபக்ஸ் விமான நிலையத்தில் தறையிறக்கப்பட்டதாகவும், 497 பயணகளுடன் லொஸ் ஏன்ஜல்ஸ் இல் இருந்து புறப்பட்ட விமானம் உடாஹ் எனும் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

air france plane

தரையிறக்கப்பட்ட விமானங்கள் பின்னர் சோதனைக்குட்பட்டதாகவும், எந்தவொரு அபாயப் பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை எனவும் அநாமோதய அழைப்பை கண்டறிய தமது புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாக ஈடுபடுவதாகவும் பிரான்ஸ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Published by

Leave a comment