பங்களாதேஷில் ஃபேஸ்புக் முடக்கம்!

whatsup facebookடாக்கா: வங்கதேசத்தில் செல்வாக்கு மிக்க எதிரணித் தலைவர்கள் இருவரின் மரண தண்டனையை உறுதிசெய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை தொடர்ந்து, ஃபேஸ்புக் மற்றும் ஏனைய இணையவழி தகவல் பரிமாற்ற தளங்களை அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர். 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தின்போது, நடந்த போர்குற்றங்கள் தொடர்பில் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அந்தத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ள நிலையில், நாட்டில் சட்டம்- ஒழுங்கை பேணுவதற்காக இந்த சமூக இணைய தகவல் தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிறப்பு போர்க்குற்ற நீதிமன்றம் ஒன்று நடத்திய விசாரணையின் முடிவில், சலாஹுதின் காதர் சவ்துரி மற்றும் அஷான் மொஹமட் முஜாஹித் ஆகியோர் மீது இனப்படுகொலை மற்றும் பாலியல் வல்லுறவு குற்றங்கள் நிருபிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

Published by

Leave a comment