ஆஸி. மண்ணில் 112 வருடங்களுக்கு பிறகு பெறப்பட்ட சாதனை!

  • AF-90

ross tylor newzealandபேர்த்: அவுஸ்திரேலிய மண்ணில் 112 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதை நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர் ரோஸ் டெய்லர் நடத்திக்காண்பித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து நியூசிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் 2வது டெஸ்ட் போட்டி பேர்த் நகரிலுள்ள வகா ஸ்டேடியத்தில் இடம்பெற்றது. நியூசிலாந்து, அணியின் ரோஸ் டெய்லர் எடுத்த 290 ஓட்டங்கள் உதவியோடு நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 624 ரன்களை குவித்தது.

ரோஸ் டெய்லர் பெற்ற 290 என்பது அலுஸ்திரேலிய மண்ணில், நடந்த டெஸ்ட் போட்டியில் வெளிநாட்டு வீரர் பெற்ற அதிகபட்ச ஓட்டங்கள் என்ற சாதனைக்கு உரித்தாகியுள்ளது. முன்னதாக, 1903ம் ஆண்டு சிட்னியில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் போஸ்டர் 287 ரன்கள் பெற்றதே அதிகபட்ச சாதனையாக இருந்தது.

1938ல் இங்கிலாந்தின் லென் ஹுட்டன்ஸ் இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக குவித்த 364 ரன்கள் என்பது ஆஸி.க்கு எதிராக எடுக்கப்பட்ட தனி நபரின் அதிகபட்ச ஸ்கோராகும்.

ross tylor newzealand

அவுஸ்திரேலிய மண்ணில் போஸ்டர் நிகழ்த்திய சாதனை தற்போது டெய்லரால் 112 வருடங்களுக்கு பிறகு தகர்க்கப்பட்டுள்ளது. எனவேதான் டெய்லர் அவுட் ஆகி வெளியேறியபோது ஒட்டுமொத்த அரங்கமும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்தது.

லென் ஹுட்சன்ஸ், டெய்லர், போஸ்டர் ஆகியோருக்கு அடுத்தபடியாக அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன் குவித்த வீரர் இந்தியாவின் வி.வி.எஸ்.லட்சுமணன் ஆகும். அவர் 2001ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் 281 ரன்கள் விளாசினார்.

அவுஸ்திரேலிய மண்ணில் நியூசிலாந்து குவித்த அதிகபட்ச ஸ்கோர் என்ற பெருமையை, முதல் இன்னிங்சில் அந்த அணி எடுத்த ரன்கள் பெற்றுள்ளன. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பேர்த் ஆடுகளத்தில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது கூடுதல் பெருமை. இதே டெஸ்ட் போட்டியில்தான் ஆஸி.பந்துவீச்சாளர் ஸ்டார்க் டெஸ்ட் போட்டிகளிலேயே அதிகபட்ச வேகத்தில் பந்து வீசிய சாதனையை நேற்று நிகழ்ச்சியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment