“காத்தான்குடி நகரசபைக்கு தேர்தல் தனியாக நடத்தப்படுகின்றபோது 12 வட்டாரங்களாக பிரிக்கப்பட வேண்டும்”: ஹிஸ்புல்லாஹ்

  • முகம்மட் சஜீ

hizbullaகாத்தான்குடி: புதிதாக நடத்தபட இருகின்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் காத்தான்குடி நகர சபை க்கு தேர்தல் தனியாக நடத்த படுகின்ற பொழுது 12 வட்டாரங்களாக பிரிக்கபடவேண்டும் என்ற ஒரு பிரேரணை முன்னர் வைத்து இருந்தோம். இருப்பினும் கடந்த நூறுநாள் திட்டத்தில் காத்தான்குடி 10 வட்டாரமாக குறைக்கப்பட்டு 10 வட்டாரமாக இப்பொழுது வர்த்தமானி மூலம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களோடு கடந்த வாரம் நடத்திய பேச்சு வார்த்தையினை அடுத்து, இன்று எல்லைகளை மீள் பரிசீலனை செய்வதற்காக நியமிக்கப்பட்டு இருக்கும் இந்த அமைச்சினுடைய மேலதிக செயலாளரும் ஆணைக்கு செயலாளருமாகிய திரு பொரல்லஸ் அவர்களையும் அவர் குழுவையும் நான் சந்தித்து காத்தான்குடி நகர சபை இதே நகர சபையாக செயற்படும் பட்ச்சத்தில் காத்தான்குடி நகர சபை கடந்த ஆட்சிக் காலத்தில் அங்கீகரிக்கப்பட்டதை போன்று 12 வட்டாரங்களாக இது பிரிக்க பட வேண்டும் என்ற விடயத்தை நான் முன்வைத்தேன் .

hizbulla

அது தொடர்பாக கடந்த ஆட்சியிலே இது தொடர்பாக வெளியிடப்பட்ட ஆவணங்கள் ,அரசாங்க அதிபருடைய அறிக்கை மற்றும்வரைபடங்கள் நகர சபை தீர்மானம் உட்பட எல்லா விடயங்களும் இன்று உள்ளுராட்சி மாகாணசபைககளின் மேலதிக செயலாளர் எல்லைகளை மீள் பரிசீலனை செய்வதற்காக நியமிக்கப்பட்டு ஆணைக்குழுவின் செயலாளருமான திரு .பொரல்லஸ் அவர்களிடம் ஒப்படைத்து இருக்கிறோம் .

ஆகவே அந்த அடிப்படையிலே நாங்கள் காத்தான்குடி நகர சபை 12 வட்டாரங்களாக பிரிக்க படவேண்டும் என்ற பிரேரணையை மக்களின்அடிப்படையில் முன்வைத்து இருக்கிறோம்.இது கடந்த ஆட்சியிலே அங்கீகரிக்கப்பட்ட போதிலும் நூறுநாள் திட்டத்தில்அமைச்சர் கரு ஜெயசூரிய அவர்கள் இறுதி தீர்மானம் எடுத்து அது 10 வட்டாரமாக குறைக்கப்பட்டுள்ளது .

மீண்டும் இதனை 12 வட்டாரமாக பிரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை இன்று நான் முன் வைத்துளேன் . இவ்வாறு தனது அறிக்கையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார் .

Published by

Leave a comment