ஜித்தாவில் கடும் மழை

  • MJ

saudi jeddah floodஜித்தா: சவுதி அரேபியாவின் வரத்தகப் புகழ்மிக்க புராதன நகரமான ஜித்தா உட்பட சவுதி அரேபிய மேற்கு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை தொடக்கம் பெய்துவரும் கனத்த மழை காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாக சவுதி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வீதிகளில் நிறைந்துள்ள மழை வெள்ளம் காரணமாக சாலைப் போக்குவரத்துக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஜித்தா நகரில் பாடசாலைகளும் பிரதான அலுவலகங்கள் சிலவும் மூடப்பட்டிருக்கின்றன.

saudi jeddah flood

இவ்வாறான பாரிய வெள்ளம் கடந்த 2011ம் ஆண்டில் ஜித்தாவில் ஏற்பட்டிருந்தது. இவ்வெள்ள விபத்து காரணமாக 120 பேர் பலியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment