- நமது நிருபர்
காத்தான்குடி: உலக நீரிழிவு தினம் நவம்பர் மாதம் 14 ம் திகதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு காத்தான்குடி நகர சபை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து இன்று 2015 நவம்பர் மாதம் 14 ம் திகதி வைத்தியசாலையில் நடாத்தியது.
வைத்தியசாலை அத்தியட்சகர் Dr. MSM. ஜாபிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள்,
பாலமுனை வைத்தியசாலை பொறுப்பதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள் காத்தான்குடி போக்குவரத்துச் சாலை முகாமையாளர் மற்றும் ஏனைய நிறுவனங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுனர், வைத்திய உத்தியோகத்தர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், துனை மருத்துவ உத்தியோகத்தாகள், அலுவலக உத்தியோகத்தாகள் வைத்தியசாலை ஊழியர்களுடன் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
நகர சபை செயலாளர் திரு. S. சர்வேஸ்வரன் அவர்கள் வரவேற்புரையினை நிகழ்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr. MSM. ஜாபிர் அவர்கள் தலைமையுரையினையும் இந் நிகழ்வின் நோக்கத்தினையும் தெளிவுபடுத்தினார்.
உலக நீரிழிவு தினத்தையொட்டிய விஷேட வளவாளராக பொது வைத்திய நிபுனர் Dr. கமகெதர அவர்கள் ஆங்கிலத்தில் நிகழ்த்த அதன் தமிழ் மூலமான விளக்கத்தினை Dr. M.நஸ்மி அஹமட் அவர்கள் திறம்பட நெறிப்படுத்தினார்கள்.
அத்துடன் நகர சபையினால் தயாரிக்கப்பட்ட நீரிழிவு சம்பந்தப்பட்ட கையேடுகளும் நிகழ்ச்சியில் கலந்து கொணடவர்களுக்கு வழங்கப்பட்டன.
நகர சபையின் சனசமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி S. உருத்திரகாந்தன் அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

Leave a comment