கொழும்பு பல்கலைக்கழக வருடாந்த கலர்ஸ் விருது வழங்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் ஹரீஸ்

  • ஹாசிப் யாஸீன்

hareesகொழும்பு: கொழும்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த கலர்ஸ் விருது வழங்கும் நிகழ்வு நாளை (16) திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் கொழும்பு ஹிங்ஸ்பெரி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இடம்பெறவுள்ளது. விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட பழைய மாணவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் இந்நிகழ்வுக்கு கொழும்பு பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஒரு உயரிய நிகழ்வுக்கு இளம் அரசியல் பிரமுகர் ஒருவர் முதற்தடவையாக பிரதம அதிதியாக அழைக்கப்பட்டுள்ளார். இதனையிட்டு கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதுடன் இது எமது பல்கலைக்கழக பழைய மாணவரான பிரதி அமைச்சர் ஹரீஸூக்கு கிடைத்துள்ள கௌரவம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இக்கலர்ஸ் விருது வழங்கும் நிகழ்வுக்கு பல்கலைக்கழக வேந்தர், உபவேந்தர், பேராசிரியர்கள், கலாநிதிகள், புத்திஜீவிகள், அரசியல் பிரமுகர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Published by

Leave a comment