பரிஸ் குண்டு வெடிப்பும் வெட்கமடையும் முஸ்லிம்களும்…

france paris– MJ

பரிஸ்: வெள்ளியிரவு பிரான்ஸ் தலைநகரில் இடம்பெற்ற துப்பாக்கித் தாக்குதல்கள் மற்றும் குண்டு வெடிப்புக்களின் பின்னர் மேற்குலகம் முஸ்லிம்களைத் தூற்றி வருகின்றன. மெல்லுவதற்கு அவல் கிடைக்கவில்லையே என ஏங்கித் தவித்த மேற்குலகுக்கு திட்மிட்ட பெரிய “டார்கட்” ஒன்று பரிஸ் நகரில் வெள்ளி இரவு கிடைத்திருக்கின்றது.

அமெரிக்காவின் கச்சிதமான வழிகாட்டல்களுடன் இயக்கப்பட்டு வரும் ஐ. எஸ் தீவிரவாதக்குழு இத்தாக்குதல்களுக்கு உரிமை கோரி இருப்பதாக மேற்கத்தைய ஊடகங்கள் கொக்கரித்து வருகின்றன.

ஐ.எஸ் இயக்கமானது இஸ்லாமிய கிலாபத்தை வென்றெடுக்கும் இயக்கமல்ல. மாறாக, சிரியாவின் ஆட்சியை அகற்றி, சிரியாவிலும், ஈராக்கிலும் இருக்கும் எண்ணெய் வளங்களையும், விலை மதிப்பற்ற புராதண சின்னங்களையும் அகழ்ந்தெடுப்பதற்கும், சியா-சுன்னி இயக்கங்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்வதற்கும் அமெரிக்காவால் திட்டமிட்டு வளர்க்கப்பட்ட ஓர் மிகத் தீவிரவாத இயக்கமாகும்.

இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி எழுதும் மேற்கத்தைய ஆங்கில ஊடகங்களுக்கு பதில் கொடுக்க ஆங்கில முஸ்லிம் ஊடகமொன்று உலகில் இல்லை என்பது வெட்கமும் அவமானமுமாகும்.

அரபுலகில் இயங்கும் இஸ்லாமிய ஆங்கில ஊடகங்கள், தனது மன்னருக்கும், அதன் அரசியல் கொள்கைகளுக்கும் கட்டுப்பட்டு, அடிமைத்தனமாக கோழைத்தனமாக செய்திகளை வெளியிடுகின்றனவே தவிர, மேற்கத்தைய ஆங்கில துவேச ஊடகங்களுக்கு பதிலடி கொடுக்கும் ஊடகங்களாக எந்த இஸ்லாமிய ஆங்கில ஊடகங்களும் இன்றுவரை உருவாக்கப்படவில்லை.

france paris

பலஸ்தீன், சிரியா, ஈராக் உட்பட அரபு வலயத்தில் விதைக்கப்பட்ட இலட்சக்கணக்கான முஸ்லிம்களுக்கு வாய் திறக்காத மேற்கத்தேய தலைவர்களும், ஊடகங்களும், பிரான்ஸ் தாக்குதல்களுக்கு வாய் திறந்து தாங்களே மனிதாபிமானம் உடையவர்கள் என அலங்கரித்து செல்கின்றனர்.

மேற்கத்தை ஊடகங்களுக்கு பதில் அடி கொடுக்கும் முகமாக சமூக வலைத்தளங்களைக் கையாளும் ஆங்கில அறிவுள்ள முஸ்லிம்கள், தகுந்த இடுகைகளை வெட்டொன்று, துண்டுரெண்டாகக் கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறான இடுகைகளுக்கு முஸ்லிமல்லாத பயனாளர்களும் ஆதரவளித்து வருகின்றனர்.

எனினும், சினிமா நடிகர்களுக்கும், சினிமாப் படங்களுக்கும் வக்காலத்து வாங்கும் நம்ம இளைஞர் சமூகம் போல் அல்லாமல், முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தும் இத்தகைய துவேச கருத்துக்களுக்கு பதிலடிகொடுக்கும் இஸ்லாத்தை நேசிக்கும் பலர் உலகில் எங்கோ ஓர் மூளையில் இருந்துகொண்டு, கருத்துக்களால் தக்க பதிலடிகளைக் கொடுத்துவருவது வரவேற்கத்தக்கவை.

பிரான்ஸ் தலைநகர் குண்டு வெடிப்பும், தாக்குதல்களும் கண்டிக்கத்தக்கவையே. யார் செய்தாலும் இததகைய தீவிரவாதச் செயல்களை இஸ்லாம் ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றம் காயமடைந்தவர்களின் ஆழ்ந்த அனுதாபங்களில் நானும் ஒருவனாய்..

Published by

Leave a comment