- எம். எச்.எம். அன்வர்
காத்தான்குடி: காத்தான்குடி மட்/மம/ மீரா பாலிகா வித்தியாலய தேசிய பாடசாலையின் நான்கு மாடிக்கட்டட அடிக்கல் நடும் நிகழ்வு இன்று 14.11.2015 பாடசாலை அதிபர் எம்.சி.எம்.ஏ சத்தார் தலைமையில் இடம்பெற்றது. 69 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள ஒன்றுகூடல் மண்டபமும் நான்கு மாடிகளைக்கொண்ட வகுப்பறைக்கட்டட தொகுதியும் கொண்ட இக்கட்டட அடிக்கல் நடும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மீள்குடியேற்ற மற்றும் புணர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா, கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் பி எஸ் எம் சார்ள்ஸ் கலந்து கொண்டு அடிக்கல் நட்டு வைத்தனர்.
விஷேட அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலய கல்விப்பணிப்பாளர் எம் ஐ ஷேகு அலி மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பொறியியலாளர் ஆர் கிருஷ்ண தாசன் மட்டக்களப்பு மத்தி வலய பிரதி கல்விப்பணிப்பாளர் ஏ இஸ்மாலெவ்வை கோட்ட கல்விப்பணிப்பாளர் எம் ஏ சி எம் பதுர்தீன் முன்னாள் நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேற்படி நிகழ்வில் இராஜாங்க அமைச்சரின் அயராத முயற்சியினால் இக்கட்டட தொகுதி பெறப்பட்டமையிட்டு பாடசாலையினால் அமைச்சருக்கு நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களால் கொட்டும் மழையையும் பாராது பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



Leave a comment