பிளவுற்றிருந்த ஐ.தே.கட்சி ஆதரவாளர்களை ஒற்றுமைப்படுத்தி சாதனை படைத்த முஸ்தபா நான் முழு மனதுடன் பாராட்டுகிறேன். திருமலை பா.உறுப்பினர்-மஹ்றூப் (காணொளி)

  • எம்.எஸ்.எம். சஜீ

unp mahroofகாத்தான்குடி: மிக நீண்ட காலமாக முரண்பட்டு பிளவுபட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களை ஐக்கியப்படுத்தும் நிகழ்வொன்று  காத்தான்குடியில் (09) நடைபெற்றது. காத்தான்குடி ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழு ஏற்பாட்டில் எச்.எம்.முஸ்தபாவின் தலைமையில் காத்தான்குடி கடாபி ரெஸ்ட் மண்டபத்தில் இன் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன் நிகழ்வில் பிரதம அதிதியாக ஐக்கிய தேசிய முன்னணியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் கலந்து கொண்டதுடன் ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சின் இணைப்பாளருமான ஏ.சசிதரன் ஐக்கிய தேசிய கட்சியின் சிறிகொத்தாவின் நிதிப் பொறுப்பாளரும் பிரதமரின் அரசியல் ஆலோசகரும் தமிழ் பிரிவுக்குப் பொறுப்பதிகாரியுமான கபூர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் மாசிலாமணி ஆகியோரும் இந்த நிகழ்வின்போது கௌரவிக்கப்ட்டனர்.

unp mahroof

மிக நீண்டகாலமாக பிளவுற்றிருந் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களை ஒற்றுமைப்படுத்த எடுத்த இந்த முயற்சி பாராட்டப்பட்டதோடு இனிவரும் காலங்களில் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டியதன் அவசியமும் கட்சியினை பலப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவமும் இந் நிகழ்வில் உரையாற்றிய பிரதம அதிதியினால் வலியுறுத்தப்பட்டது.

இப் பாராட்டு நிகழ்வில் காத்தான்குடி ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Published by

Leave a comment