பிளவுற்றிருந்த ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களை ஒற்றுமைப்படுத்தி சாதனை படைத்தார் முஸ்தபா

  • எம்.ஐ. அப்துல் நஸார்

unp1காத்தான்குடி: மிக நீண்ட காலமாக முரண்பட்டு பிளவுபட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களை ஐக்கியப்படுத்தும் நிகழ்வொன்று காத்தான்குடியில் நடைபெற்றது. காத்தான்குடி ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழு ஏற்பாட்டில் அல்ஹாஜ். எச்.எம்.முஸ்தபாவின் தலைமையில் காத்தான்குடி கடாபி ரெஸ்ட் இன் ஹோட்டலில் மேற்படி நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஐக்கிய தேசிய முன்னணியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப், மூத்த அரசியல்வாதியும், ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சின் இணைப்பாளருமான ஏ,சசிதரன், ஐக்கிய தேசிய கட்சியின் சிறிகொத்தாவின் நிதிப் பொறுப்பாளரும், பிரதமரின் அரசியல் ஆலோசகரும், தமிழ் பிரிவுக்குப் பொறுப்பான முக்கியஸ்தருமாக அல்ஹாஜ் கபூர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் மாசிலாமணி ஆகியோரும் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

unp1

மிக நீண்டகாலமாக பிளவுற்றிருந் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களை ஒற்றுமைப்படுத்த எடுத்த இந்த முயற்சி பாராட்டடதோடு இனிவரும் காலங்களில் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டியதன் அவசியமும் கட்சியினை பலப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவமும் இந் நிகழ்வில் உரையாற்றிய பிரமுகர்களால் வலியுறுத்தப்பட்டது.

nasar unp

இப் பாராட்டு விழாவில் காத்தான்குடி ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், முக்கியஸ்தவர்கள், ஊர்ப் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் என பெருமளவானோர் இந் நிகழ்வில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

unp

Published by

Leave a comment